Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்: சென்னை திரும்பும் ஓ.பி.எஸ்... அமைச்சர்களுடன் ஆலோசனையில் பழனிசாமி!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் தேனி வந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கைலாசபட்டியிலுள்ள தனது பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களை கடந்த மூன்று தினங்களாக சந்தித்து வருகிறார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன், மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான் என ஐவர் முதல் நாளிலே ஆலோசனை நடத்தினர்.

பண்ணை வீட்டில் ஓ.பி.எஸ்

இந்த நிலையில் நேற்று, காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ செல்வி, திருப்பூர் வடக்கு பாசறைச் செயலாளர் சந்திரசேகர், அருப்புக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ மணிமேகலை, திருப்போரூர் ஒன்றியத் தலைவர் சங்கீதா, தாராபுரம் நகராட்சி முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ், வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ அசோக் மற்றும் தென்காசி வாசுதேவன்நல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களோடு ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துப் பேசினார்கள்.

Also Read: `டெல்லியிலிருந்து வராத சிக்னல்; நாளை ஓ.பி.எஸ் முக்கிய ஆலோசனை!’ - பரபரப்பாகும் பொதிகை இல்லம்

இன்று மதியத்துக்கு மேல் சென்னை புறப்படும் பன்னீர் செல்வம், நாளை தனது ஆதரவாளர்களுடன் சென்னை பொதிகை இல்லத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது. அந்த ஆலோசனைக்குப் பின்னர் தனது முடிவை அவர் தலைமைக்குத் தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறதுஓ.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இன்னும் இரண்டு தினங்களில் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அமைச்சர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Also Read: `எது நடக்கவிருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்!’ - ஓ. பன்னீர் செல்வம்



source https://www.vikatan.com/news/politics/ops-returning-to-chennai-eps-on-meeting-with-ministers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக