Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

`எது நடக்கவிருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்!’ - ஓ. பன்னீர் செல்வம்

கடந்த வாரம் நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, `அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும்’ என அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில், அ.தி.மு.க மட்டுமல்லாது, தமிழக அரசியல் களத்திலும் இந்த அறிவிப்பு அதிக முக்கியத்துவம் பெற்றது.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

அதன் பின்னர், துணை முதல்வர் பன்னீர் செல்வம் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். சென்னையில் அமைச்சர்கள், தனது ஆதரவாளர்கள் என தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த பன்னீர் செல்வம், கடந்த 2 நாள்களாக தேனியில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்து வந்தார்.

Also Read: `முதல்வர் வேட்பாளர்; அக்டோபர் 7 டார்கெட்!' - 5 மணி நேரம் நீடித்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம்

இன்னும் இரண்டு தினங்களில் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ட்விட்டரில், ``தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என பதிவிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/o-panneer-selvam-tweet-regarding-his-political-decision-on-partys-cm-candidate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக