Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

2ஜி வழக்கு மேல்முறையீடு மனுக்கள்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை! #NowAtVikatan

2ஜி வழக்கு: இன்று முதல் தினமும் விசாரணை!

கடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 21-ம் தேதி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2ஜி வழக்கு: ஆ.ராசா,கனிமொழி

`இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்று சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, 2ஜி வழக்கு விசாரணை அக்டோபர் 5-ம் தேதி முதல் தினமும் நடைபெறும் எனக் கடந்த செப்டம்பர் 29-ந் தேதி அறிவித்தார். இன்று பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கும் இந்த வழக்கு விசாரணை, தினமும் நடக்கும். முதலில் சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதாத வழக்கு விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/05-10-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக