Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

நுரையீரல் தொற்று நோய்களைத் தடுக்கும் உள்முக சுவாசப் பயிற்சி... ஆயுள் நீட்டிக்கும் தேக சுத்தி யோகா!

இறைவன் படைத்த படைப்புகளில் சிறப்பானது மனித உடல். அதன் ஆற்றலும் மகத்துவமும் இன்னமும் மனிதர்களால் முழுமையாகக் கண்டறியப்படவில்லை என்றே கூறலாம். அதை அறிந்து கொண்டு ஈசத்துவம் பெற்றவர்கள் நம் சித்தர்கள் மற்றும் ரிஷிகள். உடலைக் கட்டினால் உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டினால் உலகையே கட்டலாம் என்பது சித்தர்கள் விதித்த விதி. அன்னமய கோசமான இந்த ஸ்தூல உடலைப் படிப்படியாக தேக சுத்தி பயிற்சி முறைகளால் ஆனந்தமய கோசமாக்கலாம் என்பதும் உண்மை. உடலை வளர்க்கும் அன்னமே ஜீவனின் முதல் பிரம்மம் என்றும் பிறகு இது படிப்படியாக பக்குவமடைந்து பிராணனே பிரம்மம் என்றும் பிறகு மனமே பிரம்மம் என்றும் இறுதியில் ஆனந்தம் 'பிரம்மணோ வியஜானாத்' அதாவது ஆனந்தமே பிரம்மம் என்று அறிந்து கொள்ளும்.

யோகா குரு மு. அரி

ஆனந்த நிலையை அடைய இந்த தேக சுத்தி முறைகள் அவசியமானவை. அதிலும் பிராணமய கோசத்தைச் சுத்தம் செய்து அதிக அளவு, ஆம் நுரையீரலின் முழுக் கொள்ளளவுக்கு பிராணனை உள்வாங்கும் உள்முக சுவாசப் பயிற்சி ஒவ்வோர் உயிரும் அறிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது பயிற்சி. இதனால் அன்னமய கோசமான நம் தேகம் பிராணமய கோசமாக உயர்வு பெரும். உணவு நம் உடலை வளர்க்கும் என்றால் பிராணன் உடல், உயிர் இரண்டுக்கும் அடிப்படையாக விளங்கக் கூடியது. எனவே அதிகாலையில் மேற்கொள்ளப்படும் இந்த உள்முக சுவாசப் பயிற்சி நோயற்ற ஆரோக்கிய வாழ்வை உங்களுக்கு நிச்சயம் அளிக்கும்.

இந்தப் பயிற்சியின் பலன்கள்

சுவாச சுத்தியால் உள்ளுறுப்புகள் யாவும் பலம் பெரும். பிராண சக்தி உயர்வதால் தொற்று வியாதிகள் நம்மை அண்டாது. குறிப்பாக தற்போது நம்மை அச்சுறுத்தி வரும் நுரையீரல் தொற்று நோய்கள் அணுகாது. ஆழமான மூச்சு ஆயுளை நீட்டிக்கும் என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா! சீரான மூச்சு உங்களின் வாழ்க்கையை முறையை சீராக்கும். உறுதியான தேக வடிவையும் தரும்.

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு:

இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சுத்தி முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 11.10.2020

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/news/online-yoga-training-event-from-sakthi-vikatan-for-lung-health

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக