Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

குமரி:`ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனதுனாலதான் அப்பா இறந்தார்!’ - ஆம்புலன்ஸ் டிரைவரை வெட்டிய மகன்

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் குட்டப்பன்(60). கிணறு தோண்டும் தொழிலாளி. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரானா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த ஒரு வாரமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால் குட்டப்பன் இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து குட்டப்பனின் உடலை அவரது வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

மருத்துவமனை சிகிச்சையில் ஆம்புலன்ஸ் டிரைவர்

சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி உடல் அடக்கம் செய்யும் ஏற்படுகள் செய்யப்பட்டன. சுகாதாரத் துறை அதிகாரிகள் குட்டப்பன் உடலை அடக்கம் செய்யத் தயாரானார்கள். அந்த சமயத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் குட்டப்பனின் உடல் அவரது வீட்டுத் தோட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அந்த ஆம்புலன்ஸை நாகர்கோவிலைச் சேர்ந்த பொன் ஜோஸ் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.

Also Read: சேலம்: சாலை ஓரத்தில் சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்?! - பொதுமக்கள் அதிர்ச்சி

குட்டப்பனின் உடல் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டது. அந்த சமயத்தில் கொரானாவால் இறந்த குட்டப்பனின் மகன் ஷிபின் திடீரென அரிவாளால் ஆம்புலன்ஸ் டிரைவர் பொன் ஜோஸை வெட்டியுள்ளார். இதில், பொன் ஜோஸின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அங்கிருந்தவர்கள் ஷிபினைத் தடுக்க முயன்றனர். அதற்கு,``எனது அப்பாவை ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனதினாலதான் அவர் இறந்தார். அதற்குக் காரணமான ஆம்புலன்ஸ் டிரைவரை நான் வெட்டினேன்" எனக்கூறி ஆவேசமாகியிருகிறார்.

போலீஸ் விசாரணை

அவரைத் தடுக்க முயன்ற சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஷிபின். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Also Read: கொரோனா விதிமீறல்: போலீஸாரும் இனி அபராதம் விதிக்கலாம்! - தமிழக அரசின் அவசரச் சட்டம் சொல்வது என்ன?

இந்த பிரச்னையைத் தொடர்ந்து இறந்த நோயாளியின் உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை ஊழியர்கள் மறுத்துள்ளனர். குட்டப்பனின் உடலை வேறு யாரும் அடக்கம் செய்ய முன்வரவில்லை. தொடர்ந்து பா.ஜ.க மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சஜூ தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் குட்டப்பனின் உடலை அடக்கம் செய்தனர்.

கொரோனா

கொரோனாவால் இறந்தவரின் உடலை கொண்டுவந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து களியக்காவிளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/kanyakumari-corona-patients-son-attacks-ambulance-driver

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக