Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

சேலம்: `கவனக் குறைவால் தவற விட்டிருக்கிறார்கள்..!’ - சுகாதாரப் பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம்

‘’சாலை ஓரத்தில் சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்?’’ பொதுமக்கள் அதிர்ச்சி என்ற தலைப்பில் கடந்த 2ம் தேதி விகடன் டிஜிட்டல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லும் வழியில் கொத்தாம்பாடி என்ற இடத்தில் கொரோனா டெஸ்ட் மாதிரிகள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அச்செய்தி வெளியிட்டிருந்ததோடு மாவட்ட சுகாதார துணை இயக்குநர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட துணை இயக்குநர் தற்போது 2 சுகாதார பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி மதியம் ஆத்தூர் டு சேலம் செல்லும் வழியில் கொத்தாம்பாடி என்ற இடத்தில், அன்று பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட 8 கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையோரமாக சிதறி கிடந்தது. ``ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்படி கொண்டு செல்லும் போது தவறி இருக்கும்” என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்கள்.

கொரோனா

ஆத்தூர் மருத்துவத்துறை துணை இயக்குநர் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து ஆய்வுகள் நடத்தி விசாரணை மேற்கொண்டார்கள். சுகாதாரத் துறை தற்காலிக ஊழியர்கள் சரவணன், செந்தில் ஆகியோரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதையடுத்து இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி ஆத்தூர் சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார், ``தலைவாசல் பகுதியில் உள்ள பல கிராம மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் ஒரு இடத்தில் சேகரித்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இப்பணியை சுகாதாரத்துறை தற்காலிக ஊழியர்கள் சரவணன், செந்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் டூவிலரில் செல்லும் போது கவனக் குறைவால் தவற விட்டிருக்கிறார்கள். அதனால் இருவரையும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/two-health-workers-sacked-on-samples-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக