Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதலிய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் இணையவழி இலவசப்பயிற்சி வகுப்புகள்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுறத்தில் இருக்கும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் சார்பில் இந்தியக் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இணையவழி இலவச ஆறுநாள் பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறார்கள். இந்த வகுப்புகள் 5.10.2020 முதல் 12.10.2020 முடிய (சனி, ஞாயிறு நீங்கலாக) ஆறு நாள் நடைபெறும்.

ஐ.ஏ.எஸ்

தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு, தொடக்கக்காலத் தமிழக வரலாறு, உலகப் பொருளாதாரச் சூழல், இந்தியப் பொருளாதாரச் சூழல், இந்திய அரசியல் அமைப்பு, கோயில்களும் கட்டடக் கலையும், மன அழுத்த மேலாண்மை, சூழலியல் எனப் பல்வேறு பாடத் தலைப்புகளில் மிகச்சிறந்த அறிஞர்கள் கருத்துரையாற்ற உள்ளனர். அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்குரிய பாடங்களை அனைவருக்கும் கற்பிக்கும் நோக்கிலும், திறமையும் ஆர்வமும் உழைப்புமுள்ள இளைஞர்களை அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் நோக்கில் இந்த நிகழ்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் யூடியூப் வழியாக நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்புகள் குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆர்வமுள்ள பிற துறை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வித்துறையினருக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இறையன்பு

“இது ஓர் அரிய வாய்ப்பு. இதில் கலந்துகொள்ளப் பதிவுகள் ஏதும் தேவையில்லை. எனவே மாணவர்கள் தவறாமல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று இந்திய குடிமைப்பணித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் இறையன்பு ஐ.ஏ.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்வுகள் நடைபெறும் நேரம்: காலை 11 - 12.30 மற்றும் பிற்பகல் 2 - 3.30

வகுப்புகளில் கலந்துகொள்ள இந்த யூடியூப் முகவரியில் இணையலாம்.



source https://www.vikatan.com/news/education/online-coaching-classes-for-civil-service-exams

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக