Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

சென்னை: `250 சவரன் நகைகள்; ரூ. 95 லட்சம் பணம்' - வயதான தம்பதியரைக் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளை!

சென்னை, தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவைக் சேர்ந்தவர் நூருல் யாக்கூப் (71). இவர், துபாயில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரும், இவரின் மனைவியும் தனியாக சென்னையில் வசித்துவந்தனர். நூருல் யாக்கூப் மனைவியின் உறவினரான முஸ்தபா என்பவர் மூலம் மொய்தீன் (28) என்பவர் கடந்த ஒன்பது நாள்களுக்கு முன்னர் இவர்களிடம் வேலையில் சேர்ந்திருக்கிறார். இந்தநிலையில், நேற்று இரவு வீட்டுக்குள் வீச்சரிவாளுடன் ஒரு மர்மக் கும்பல் நுழைந்தது.

கொள்ளை

வீட்டிலிருந்த நூருல் யாக்கூப், அவரின் மனைவி, மொய்தீன், முஸ்தபா ஆகியோரைக் கத்திமுனையில் மிரட்டிய அந்தக் கும்பல், பின்னர் அவர்களைக் கயிறால் கட்டியது. இதையடுத்து அந்தக் கும்பல், வீட்டிலிருந்த 250 சவரன் தங்க நகைகள், 95 லட்சம் ரூபாய், சொகுசு கார், 60,000 ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு முஸ்தபாவையும் கடத்திச் சென்றனர். கொள்ளையர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார், ஆட்டோவையும் எடுத்துச் சென்றனர்.

Also Read: `துப்பாக்கிமுனையில் டிரைவர்; ரூ.12 கோடி செல்போன்கள் கொள்ளை!' - ஆந்திரா அதிர்ச்சி

பின்னர் தி.நகர். ஜி.என்.செட்டி சாலையில் முஸ்தபாவையும் ஆட்டோவையையும் விட்டுவிட்டு கொள்ளைக் கும்பல் காரில் தப்பிச் சென்றது. வீட்டுக்கு வந்த முஸ்தபா, நூருல் யாக்கூப், அவரின் மனைவி, மொய்தீன் ஆகியோரின் கை கால், வாயில் கட்டப்பட்டிருந்த கட்டுக்களை அவிழ்த்து மீட்டார். இது குறித்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸாரும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சகிதம் வந்து விசாரித்தனர். பதிவாகியிருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

கொரோனா

Also Read: `துப்பாக்கிமுனையில் டிரைவர்; ரூ.12 கோடி செல்போன்கள் கொள்ளை!' - ஆந்திரா அதிர்ச்சி

நூருல் யாக்கூப்பிடம் போலீஸார் விசாரித்தனர். மேலும், அந்தப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். போலீஸாரின் சந்தேகப் பார்வை மொய்தீன், முஸ்தபா ஆகியோர் மீது விழுந்திருக்கிறது. அதனால் அவர்கள் இருவரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்தநிலையில் முஸ்தபாவுக்கு கொரோனா தொற்று என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், கொள்ளையடித்தது யாரென்று போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/250-sovereign-jewels-95-lakh-rupees-and-car-theft-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக