Ad

திங்கள், 8 மே, 2023

`ரூ.45 கோடி அல்ல; ரூ.171 கோடி’ - முதல்வர் பங்களா சீரமைப்பு விவகாரத்தில் கெஜ்ரிவாலை சாடும் காங்கிரஸ்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்களாவை சீரமைக்க ரூ.45 கோடி செலவிடப்பட்டது, தொடர்பாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை வெடித்தது. இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி தரப்பு மறுத்துவந்தது. பிரதமர் மோடியால் இது போன்ற குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் ஆம் ஆத்மி கூறியது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாக்கன், டெல்லி முதல்வர் பங்களாவை சீரமைக்க. ரூ.171 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், "முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பங்களாவை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவானதாகக் கூறப்படுகிறது. ஆனால் உணமையில், அதைவிட மூன்று மடங்கு அதிகமாக, அதாவது ரூ.171 கோடி செல்வாகியிருக்கிறது. டெல்லி முதல்வரின் பங்களாவைச் சுற்றி 22 அதிகாரிகள் வசிக்கும் வீடுகள் இருக்கின்றன. கெஜ்ரிவாலின் பங்களாவை சீரமைத்து விரிவாக்கம் செய்வதற்காக அதிகாரிகள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, காமன்வெல்த் கிராமத்தில் 21 வகை வீடுகள் கொண்ட 5 அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு வாங்கி தங்க வைத்திருக்கிறது.

இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா ரூ.6 கோடி. இந்த பணம் மாநில கருவூலத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் முதல்வர் பங்களாவுக்கான செலவில் சேர்க்கப்பட வேண்டும். நான் அங்கு சென்றபோது, ​​அது ஒரு மாடி கட்டடம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. இந்த பகுதி லுட்யனின் பகுதியை விட மிகப் பழமையானது. இன்று அவர்கள் 20,000 சதுர அடியில் மூன்று தளங்களை வடிவமைக்கிறார்கள்.

டெல்லி

அதற்காக 28 வளர்ந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது குறித்துதான் டெல்லி மக்களிடம் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். மேலும், இந்த பங்களா விவகாரம் குறித்து தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதுவேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/171-crore-spent-for-kejriwals-bungalow-ajay-maken

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக