Ad

புதன், 1 மார்ச், 2023

கிரீஸ்: ஒரே தண்டவாளத்தில் வந்த பயணிகள், சரக்கு ரயில்கள்; நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் ஏதன்ஸில் இருந்து தெசலோனிகிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டிருக்கிறது. இந்த ரயிலில், 250-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கின்றனர். இந்த நிலையில், லாரிசா நகர் அருகில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன், பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்ததில் பயணிகள் ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் முதல் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதமாகியிருக்கிறது.

விபத்தைத் தொடர்ந்து, உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையும், மீட்பு குழுவும், ரயிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டுவருகிறது. இந்த விபத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விபத்தில் 85 பேர் படுகாயமடைந்திருக்கின்றார். பலர் தீக்காயம் அடைந்திருக்கின்றனர்.

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இந்த விபத்து குறித்து பேசிய அந்த தெசலி ஆளுநர், "காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து வருகிறோம். எதிரே வரும் ரயில் தெரியாததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கருதுகிறோம். மீட்புபணிக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும். ரயிலில் இருந்த 250 பயணிகள் பத்திரமாக பேருந்து மூலம் தெசலோனிகிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/oddities/international/two-trains-collided-head-on-in-greece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக