இரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களில், காவலர் ஒருவரைக் கொன்ற இருவரைத் தூக்கிலிட்டது அந்நாட்டு அரசு.
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பிரபலமான 20 வயது எலெனா ஹுல்வா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதி தற்போது கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஆன்டோனி கூறியிருக்கிறார்.
மியான்மார் சிறையில் வெடித்த கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மொரோக்கோவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.
புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி பில்லி எலிஷின் வீட்டு முகவரி தவறுதலாக 1.78 லட்சம் பேருக்கு அனுப்பப்பட்டது.
சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இந்த நிலையில், பனியால் வாகன விபத்துகளில் சிக்கி, 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மெக்ஸிகோவில் நடந்த ரயில் விபத்தில் 57 பேர் பலத்த காயங்களுடன் உயிர்த் தப்பினர்.
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டு ராணுவ தளபதி சவுதிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட 3 குர்திஷ் பெண்களின் தீர்க்கப்படாத வழக்குகளுக்காக, ஆயிரக்கணக்கானோர் பாரீஸில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
source https://www.vikatan.com/ampstories/government-and-politics/international/vikatan-international-news-roundup-08-01-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக