மகாராஷ்டிராவின் பாராமதியில் உள்ள சங்கவி என்ற பகுதியில் யுவராஜ் கெய்க்வாட் என்பவர் தனது வீட்டுக்கு அருகில் கிளினிக் ஒன்று நடத்தி வருகிறார். மருத்துவர் யுவராஜ் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வெளியில் இருந்து வந்த சிலர், கதவை வேகமாக தட்டியுள்ளனர். மருத்துவர் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார்.
கிளினிக்கை திறப்பதற்கு தாமதமானதால் நோயாளியுடன் வந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மருத்துவரின் வீட்டு கண்ணாடி ஜன்னலை முதலில் தாறுமாறாக உடைத்திருக்கிறார்கள்.
அதன் பின்னர் கதவை உடைத்து உள்ளே வர முயற்சி செய்தனர். அப்போது யுவராஜும், அவருடைய மகனும் கதவை திறக்க வந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் அங்கிருந்த கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். இச்சம்பவம் செப்டம்பர் 6 ஆம் தேதி நடந்தது. இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
இதனையடுத்து இது குறித்து போலீஸிக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாலேகான் காவல்துறையினர் ஆனந்த் என்கிற அனில் ஜக்தாப், விஸ்வஜீத் ஜக்தாப், அசோக் ஜக்தாப் மற்றும் பூஷன் ஜக்தாப் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
source https://www.vikatan.com/news/crime/doctor-beaten-for-delay-in-opening-clinic-door
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக