Ad

திங்கள், 12 செப்டம்பர், 2022

`விதிகளுக்கு முரணாக சான்றிதழ்’ - சேலத்தில் 3 மருத்துவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதி உள்ளது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சேலம் ஸ்ரீரங்கம் பாளையத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனோகர், சூரமங்கலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வசந்தகுமார், ஜான்சன் பேட்டையில் உள்ள மருத்துவ பேராசிரியர் சுஜாதா ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 6.30 மணி அளவில் சேலம், தர்மபுரி, பகுதிகளை சேர்ந்த விஜிலென்ஸ் பிரிவினர் மேற்கண்ட மருத்துவர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/news-about-salem-doctors-house-vigilance-raid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக