Ad

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஏ.டி.எம்-ல் உதவுவது போல பணம் திருட்டு - 271 போலிகார்டுடன் மத்திய அரசு ஊழியர் சிக்கியது எப்படி?

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஏ.டி. எம். மையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்கு வழங்கப்பட புதிய ஏ.டி.எம். காட்டை ஆக்டிவேட் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த இளம்பெண்ணுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணுக்கே தெரியாமல் அவரின் ஏ.டி.எம். கார்டை மாற்றி வேறொரு கார்டை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

ஏ.டி.எம் மையம்

அந்த நபர் சென்ற சிறிது நேரத்தில், அந்த இளம்பெண் வங்கிக் கணக்கிலிருந்து 29,500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருந்ததது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுகுறித்து எம்.கே. பி.நகர்ப் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, காவல்துறையினர், அந்த ஏ.டி.எம் மையத்திலிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில், மோசடியில் ஈடுபட்டவரின் உருவம் பதிவானது. இந்த காட்சிகளைக் கொண்டு அந்த நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் மோசடியில் ஈடுபட நபர் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. மத்திய அரசு நிறுவனமான ஆவடி டேங்க் தொழிற்சாலையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் பிரபு, ஏ.டி.எம் மையத்தில் உதவி செய்வதுபோல, பலரிடம் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பிரபு

பிரபுவிடமிருந்து பல வங்கிகளைச் சேர்ந்த 271 போலி ஏ.டி.எம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்த அட்டைகளை பிரபுவுக்குக் கொடுத்தது யார் என்று காவல்துறையினர், விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது . இதுவரை பல லட்ச ரூபாய் மோசடி செய்திருக்கும் பிரபு, தன் மகளின் திருமணத்துக்கு வாங்கிய கடன் காரணமாக இந்த குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/crime/central-govt-employee-arrested-in-chennai-with-271-fake-atm-cards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக