Ad

புதன், 16 மார்ச், 2022

`` ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி"- சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து ஜெலன்ஸ்கி

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில், உக்ரைனில் கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யப் படைகளால் தொடங்கிய போரானது இன்றுடன் 22-வது நாளை எட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் பல வாக்களித்தபோதும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை தோல்வியுறச் செய்தது.

பின்னர் ஐ. நா சபையானது, `உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று சர்வதேச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதைத்தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்ததது. அதில், ``உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும், மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன், போரை நீட்டிக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது" என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரஷ்ய அதிபர் புதின்

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று ட்வீட் செய்துள்ளார். அதில், "போரை ரஷ்யா உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி. ரஷ்யா உடனடியாக இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டும். மாறாக புறக்கணித்தால் அது ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியிருந்தாலும், ரஷ்யா தரப்பிலிருந்து இதுவரை யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/international/volodymyr-zelenskyy-in-twitter-icjs-judgment-is-a-complete-victory-for-ukraine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக