சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (31). இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆம்னி வேனில் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பொன்னமராவதி போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2019 ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கானது, கடந்த 3 ஆண்டுகளாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது, அதில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
வழக்கை விசாரித்த நீதிபதி முனைவர் சத்யா, 363 சட்டப்பிரிவின் படி, தாமரைச் செல்வனுக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20,000அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதமும் விதித்தார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக தாமரைச் செல்வனுக்கு மொத்தமாக 21ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.45,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத்தைக் கட்டத்தவறினால், மேலும் 1 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளி தாமரைச் செல்வன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
source https://www.vikatan.com/news/crime/court-sentenced-21-years-to-the-accused-person-in-pocso-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக