Ad

ஞாயிறு, 27 மார்ச், 2022

"அனுபவங்கள் நம்மைச் செழுமைப்படுத்தும்” - எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி வாழ்க்கை சொல்லும் பாடங்கள்!

இலக்கிய வாசிப்புகள் சிந்தனையைக் கூராக்கும்:

கார்க்கி ஒருமுறை கப்பலில் பயணம் செய்தார். அந்தக் கப்பலில் சமையல்காரராக இருந்தவர் புத்தகங்கள் படிப்பதற்கு கார்க்கிக்கு ஆர்வம் ஊட்டினார். இதன் காரணமாக நிறைய புத்தகங்களைக் கார்க்கி படிக்கத் தொடங்கினார். முக்கியமாக ரஷ்ய எழுத்தாளர்கள். அலெக்சாண்டர் டூமாஸ், தஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செக்கோவ் ஆகியோரின் படைப்புகள் கார்க்கியின் சிந்தனைகளை விரிவுபடுத்தின.

பல மொழியாற்றல் பல விதங்களில் உதவும்

கார்க்கி தனது பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. காரணம் குடும்ப வறுமை. என்றாலும் வேலை செய்துகொண்டே முயன்று கல்வி கற்றார். அதுமட்டுமல்ல ரஷ்ய மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளையும் நன்கு கற்றுக்கொண்டார். இவை தன் எழுத்துத் திறமைக்கும் பயன்பட்டன என்று அவர் கூறியதுண்டு.

மாக்சிம் கார்க்கி

நெருங்கியவர்கள் எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்களெனில் மேலும் சிறப்பு

ஏகடரினா பவ்லோவ்னா என்பவரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார் கார்க்கி. திருமணத்துக்கு முன் கார்க்கி எழுதிய நூல்களில் அச்சுப்பிழை திருத்துவதில் உதவியவர் இவர். சிறந்த இலக்கியவாதியாகவும் விளங்கினார். இவரை மனைவியாகப் பெற்றது எழுத்துலகில் கார்க்கி முன்னேற மேலும் உதவியது.

பலவித அனுபவங்கள் செழுமைப்படுத்தும்

வறுமை காரணமாக இளம் வயதில் பலவிதப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர் கார்க்கி. ஷூக்கள் விற்கும் கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். ஓவியப் பள்ளி நடத்திய ஒருவரிடம் சிறு பணிகளைச் செய்பவராக இருந்திருக்கிறார். நீராவிக் கப்பல் ஒன்றில் பாத்திரங்களைக் கழுவும் பணியைச் செய்திருக்கிறார். தன் முதலாளிகளிடம் அடிக்கடித் திட்டு வாங்கியிருக்கிறார். உணவு இல்லாத கொடுமையையும் அவர் நிறைய அனுபவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய ரஷ்ய மக்களைப்பற்றி இவர் அறிந்துகொண்டதுபோல் வேறெந்த ரஷ்ய எழுத்தாளரும் அறிந்து கொண்டதில்லை எனலாம். இதன் காரணமாக அவரது கதைகளுக்கு ஆழமான உள்ளடக்கம் கிடைத்தது.

தாய் நாவல்

குறிப்பெடுத்துதுக் கொள்வது பலவிதங்களில் நன்மை

கைவசம் எப்போதும் ஒரு குறிப்பேடு வைத்திருப்பார் கார்க்கி. தனக்குத் தோன்றுவதை எல்லாம் அதில் எழுதி வைப்பார். இதன் காரணமாகத் தனது எந்த சிந்தனையும் இழந்துவிடாமல் அதை உரிய நேரத்தில் பயன்படுத்திக் கொள்வது அவருக்கு சாத்தியமானது



source https://www.vikatan.com/arts/literature/lessons-we-need-to-learn-from-the-life-of-maxim-gorky

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக