நடிகை தபு தன்னுடைய தனித்துவ நடிப்பால் தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். 2015ல் ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் படத்தில் (தமிழில் பாபநாசம்) மகனைத் தொலைத்து தேடும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது. இப்போது Bhool Bhulaiyaa 2, விஷால் பரத்வாஜின் Khufiya, பரத்வாஜ் மகன் இயக்கும் படம் என பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார் தபு. காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, அஜித்துடன் கண்டுகொண்டேன் கன்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர், ஒரு விஷயத்தில் மட்டும் ஆப்சென்ட். சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்தாத நடிகைகளில் இவரும் ஒருவர். அவரிடம் ட்விட்டர் அக்கவுன்ட் கிடையாது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பார்க்க முடியாது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தடாலடி பதிலளித்திருக்கிறார். 'மற்ற பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கிறார்களே' என்கிற கேள்விக்கு, "சோஷியல் மீடியாவில் இருக்க வேண்டியது இல்லை, அவர்களின் விருப்பம் அது. யாரும் வலுக்கட்டாயமாக செய்யச் சொல்லிச் செய்வதில்லை. அவர்களுக்கு வேண்டுவதைச் செய்கிறார்கள். தனிப்பட்ட விருப்பம் அது. உங்கள் விருப்பங்கள் தான் நீங்கள் யார் எனக் காட்டும்" என்கிறார்.
"இத்தனை நாட்களாக எங்கே போயிருந்தாய்" என்கிற கேள்வி தான் நான் வெறுக்கிற கேள்வியாக இருக்கும்" என்கிறார் தபு. "நீங்கள் இன்றைக்கு உங்கள் கரியரை ஆரம்பித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்" என்ற கேள்விக்கு, "எனக்கு தெரியவில்லை. எதை நான் வித்தியாசமாக செய்திருப்பேன் எனத் தெரியாது. என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. முன்பு நான் இருந்ததற்கும் இன்றைக்கு இருப்பதற்கும் மிகப்பெரிய மாற்றங்கள் அடைந்திருக்கிறேன் என நினைக்கிறேன்" என்று முடிக்கிறார் தபு. 2013 -ல் வெளியான விக்ரமின் 'டேவிட்' படம் தான் கடைசியாக இவர் தமிழில் நடித்தது.
source https://cinema.vikatan.com/bollywood/tabus-answers-about-her-social-media-interaction
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக