94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் யாருமற்று நடத்தப்பட்ட விழாவில் இந்த ஆண்டு மூன்று தொகுப்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். Regina Hall, Amy Schumer and Wanda Sykes இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். டெனி வில்நௌ (Denis Villeneuve) இயக்கிய சயின்ஸ் பிக்ஷன் படமான 'Dune' ஆறு விருதுகளை அள்ளியிருக்கிறது. மொத்தமாக 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது. சிறந்த விசுவல் எபக்ட்ஸ், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என ஆறு விருதுகளை Dune படம் பெற்றிருக்கிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலில் உள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக விருது விழாவில் சில நிமிடங்கள் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டது. "அவர்களின் சொந்த எல்லைக்குள்ளே ஆக்கிரமிப்பு, குளறுபடிகள் மற்றும் அநீதியை எதிர்கொண்டு வரும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில நிமிடங்கள் மௌனம் காக்கப்படுவதாக" அகாதமி அறிவித்தது.
அரியானா டிபோஸ் (Ariana DeBose) சிறந்த துணைநடிக்கைக்கான விருது பெரும் முதல் கறுப்பின, குயர் பாலின வகுப்பைச் சேர்ந்தவர். West Side Story என்ற படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. CODA என்கிற படத்தில் நடித்தற்காக ட்ராய் கொட்சர் (Troy Kotsur)க்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆஸ்கார் விருது பெறும் முதல் காதுகேளாத நடிகர் இவர் தான்.
Encanto படத்திற்கு சிறந்த அனிமேஷன் பியூச்சர் படத்திற்கான விருதும், சிறந்த டாக்குமெண்டரி பியூச்சர் படத்திற்கான விருது “Summer of Soul (Or, When The Revolution Could Not Be Televised)” படத்திற்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர் Steven Spielberg ஆறு தசாப்தங்களாக நாமினேட் செய்யப்பட்டு கொண்டிருக்கும் முதல் இயக்குனர் என்கிற பெயரைப் பெறுகிறார். இந்த வருடம் அவரின் 'West Side Story' நாமினேஷனில் இருந்தது. அறிவியல் புனைகதைகளைப் படமாக்குவது எளிதல்ல. Dune போன்ற சிக்கலான கதையைத் திரைப்படமாக மாற்றியதோடு அதற்காக ஆறு விருதுகளையும் தன்வசப்படுத்தி இருக்கும் Dune நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இந்த வருடத்தின் பேசுபொருள்.
source https://cinema.vikatan.com/international/94th-academy-awards-highlights-first-queer-black-woman-dune-deaf-man
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக