Ad

செவ்வாய், 16 மார்ச், 2021

Election Updates: `குறுகிய காலம்; எங்கள் கட்சி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை!” - அர்ஜுனமூர்த்தி

`தேர்தலில் போட்டியிடவில்லை...’ - அர்ஜுன மூர்த்தி

கடந்த மாதம் கட்சியை தொடங்கிய அர்ஜுனமூர்த்தி, 234 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிடும் என அறிவித்தார். தொடர்ந்து கட்சிக்கு ரோபோட் என்ற எந்திரன் சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த தேர்தல் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என அறிவித்திருக்கிறார். இது தொடர்பான அறிக்கையில், ``பிப்ரவரி 26, 2021 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்த, ஒரு நாளைக்கு பிறகு, அதாவது பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. ஆரம்ப கட்ட முயற்சியாக வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற திட்டமும் கட்சிக்கு இருந்தது.

அர்ஜுனமூர்த்தி-ரஜினிகாந்த்-தமிழருவி மணியன்

நேரத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாமிருந்தோம். இருந்தும் 2021 மார்ச் 9-ம் தேதி எங்கள் புதுமையான, மிக்க நம்பிக்கை அளிக்கும் சின்னமான ரோபோட் என்ற எந்திரன் மற்றும் எங்கள் புரட்சிகரமான எண்ணங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது பொதுமக்கள், ஊடகங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் பாராட்டுதலும் வரவேற்றனர். காலத்துக்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம். எங்கள் சத்தியம் சமத்துவம் சமர்ப்பணம் என்ற கொள்கைகள் தான் எனது அனைத்து பணிகளுக்கும் செயல்முறைக்கும் வழிகாட்டுகின்றன. அனைத்து தொகுதிகளுக்கும் அலைமோதும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரரிடமிருந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்தல், தேவையான மற்ற வளங்கள் சேகரிப்பு மற்றும் சிறிய நிர்வாகம் அனைத்து தொகுதிகளிலும் தொழில்நுட்ப வரிசைப்படுத்துதல், எடுத்துச் செல்வது, மாநிலம் முழுக்க திட்டமிட்டபடி விரிவாக பிரசாரம் செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் இந்த குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் கையாளுவதற்கு நமக்கு இடம் தரவில்லை என்பதே உண்மை.

இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 6, 2021 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தற்போதைய தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/tn-assembly-election-2021-updates-17-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக