Ad

வியாழன், 4 மார்ச், 2021

Election Updates: 10 -ம் தேதி தி.மு.க.. இன்று அ.தி.மு.க?! -விரைவில் வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்

இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்?!

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு உள்ளது. தி.மு.க கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. காங்கிரஸுடனும் ம.தி.மு.க-வுடனும் மற்ற கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க.

இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். திருச்சி மாநாடு குறித்தும் வேட்பாளர் தேர்வு குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்போது ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10ம் தேதி வெளியாகும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா அறிவாலயம்

அ.தி.மு.க-வை பொறுத்தவரை பா.ம.க உடன் மட்டும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க-வுடனும் தே.மு.தி.க உடனும் இதர கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

அ.தி.மு.க -வில் விருப்பமனு அளிப்பதற்க்காக வந்த தொண்டர்கள் அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

முன்னதாக அ.தி.மு.க தரப்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனு அளித்திருந்தனர். அ.தி.மு.க சார்பில் சுமார் 8,000 பேர் விருப்ப மனு அளித்து இருந்த நிலையில், நேற்று அவர்களுக்கான நேர்காணல் ஒரே நாளில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நேர்காணல் நடந்து முடிந்த நிலையில் இன்றைய ஆலோசனைக்கு பிறகு அ.தி.மு.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamilnadu-election-2021-and-other-current-updates-05-03-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக