மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில், உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு, மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் ஆளும் சிவசேனா அரசுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியது. இந்நிலையில் இதுகுறித்து அம்மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான பா.ஜ.க கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த மாநில துணை முதல்வர் அஜித்பவார், `` அவுரங்காபாத் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் நோயாளி பாலியல் சீண்டலுக்குள்ளானது உண்மை எனத் தெரிய வந்துள்ளது. இது ஒரு துரதிஷ்ட வசமான சம்பவம். பாலியல் வன்கொடுமை நடக்காத போதும், மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. புகாரைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட நடவடிக்கையாக, அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கி இருக்கிறோம்” என்றார்.
மேலும், `` வரும் 31-ம் தேதிக்குள், கொரோனா நோயாளிகளை பாதுகாப்பாக, அனுமதிப்பது முதல் சிகிச்சை முடிந்து அனுப்புவது வரை பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அறிவிப்போம்” என்றும்தெரிவித்தார்.
Also Read: கொரோனா தடுப்பூசிக்கு முன் ஆன்டிபாடி டெஸ்ட் அவசியமா? - நிபுணர்கள் விளக்கம்
இந்த புகார் மீது, விசாரணை நடத்திய அரசு மருத்துவமனை மூத்த அதிகாரி, டாக்டர் நீதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது சம்பந்தப்பட்ட பெண் நோயாளியை டாக்டர் தனது கேபினுக்கு அழைத்து பேசியுள்ளார். உடல் ரீதியாக எந்த வித தாக்குதல் சம்பவமும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண், அந்த மருத்துவர் தனக்கு போன் மூலம் அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாகவும், சம்பவத்தன்று அதிகாலையில் தன்னை மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இச்சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய விவாதத்தை மகாராஷ்டிராவில் ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/female-covid-patient-molest-case-doctor-dismissed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக