Ad

வியாழன், 4 மார்ச், 2021

மேற்கு வங்கம்: மம்தா தான் டார்கெட்; யார் முதல்வர் வேட்பாளர்? - மோடி நடத்திய அவசர ஆலோசனை

மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கூட்டணி, தொகுதி பங்கீடு என கட்சிகள் பரபரப்பாக வேலைகளை தொடங்கிவிட்ட நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்த, பா.ஜ.க சார்பில் யார் எதிர்வேட்பாளராக களமிறக்கலாம் என தீவிர ஆலோசனையில் பா.ஜ.க தலைமை ஈடுபட்டு வருகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை அறிவித்தது. இந்த நிலையில் மேற்குவங்க தேர்தல் குறித்தான பா.ஜ.க தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு வரை நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றார் . திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தலைவரான மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார். இதில் பவானிபூர் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட மத்திய அமைச்சர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல், நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய மம்தாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த, சுவேந்து அதிகாரியை களமிறக்க பா.ஜ.க ஆலோசித்து வருகிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திக் காட்டுவேன் என்று பா.ஜ.க தலைவர்களிடம் சுவேந்து அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் முக்கியமான 15 தொகுதிகளில் யாரை களமிறக்குவது என்பது குறித்து பா.ஜ.க தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 30 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை தூக்கியெறிய செய்ததில் நந்திகிராமில் நடந்த விவசாயிகள் போராட்டம் மிக முக்கியமானது. அன்றைய காலகட்டத்தில் அந்த போராட்டங்களில் முன்னெடுத்தவர் சுவெந்து அதிகாரி. அதே தொகுதியில் தனக்கு என உறுதியான வாக்குவங்கியையும் அவர் உருவாக்கி வைத்துள்ளார்.

Also Read: மும்முனைப் போட்டி; பரபரக்கும் தேர்தல் களம் - மக்கள் யார் பக்கம்? மேற்கு வங்க ரிப்போர்ட்!

பாவனிபூர் தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற மம்தா இந்த முறை பாவனிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். நந்திகிராம் எனக்கு அதிர்ஷ்டமான இடம், நந்திகிராம் எனக்கு அக்கா என்றால் பவானிப்பூர் தங்கை என்று குறிப்பிட்டுள்ள மம்தா, வாய்ப்பிருந்தால் இரண்டு தொகுதியிலும் போட்டியிடுவேன், இல்லையென்றால் பாவனிபூரில் வேறு யாராவது போட்டியிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மேற்குவங்கத்தின் நிலவரம் குறித்து திலீப் கோஷ் ,சுவேந்து அதிகாரி மற்றும் ராஜிபி பானர்ஜி ஆகியரிடம் கேட்டறிந்துள்ளார் மோடி. மம்தாவிற்கு எதிராக யார் களமிறக்கலாம் என்ற இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் என்பதால் பா.ஜ.க-வினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/who-wii-contest-agains-mamata-bjp-discussion

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக