தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியில், மாநிலத்தையே ஆளும் அ.தி.மு.கவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. ராஜ்யசபா எம்.பி. விஜயகுமார் மட்டும்தான் மாவட்டத்தில் உள்ள கட்சிக்கான மக்கள் பிரதிநிதி!
இதனால், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக ஜெயித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் ர.ர.க்களிடம் உள்ளது. தேசியக் கட்சிகளின் கோட்டை குமரி என்பதால், பா.ஜ.கவும் தன் பங்குக்கு தொகுதிகளை கோருகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர், "அ.தி.மு.க.வில் தளவாய்க்கும் லோக்கல் நிர்வாகிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றைக் கேட்டு தளவாய்சுந்தரமும், அ.தி.மு.க. கலைப்பிரிவு இணைச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் அன்பழகனும் மனு போட்டுள்ளனர். தளவாய் பிள்ளைமார் சமூகத்தையும், நாஞ்சிலார் அய்யாவழி நாடார் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
முன் எப்போதும் இல்லாத வகையில் மண்ணின் மைந்தர் கோஷம் இந்த தேர்தலில் அதிகமாகவே எதிரொலிக்கிறது. அதிலும், குமரியில் இம்முறை நாடார் மட்டுமே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென போர்க்கொடி தூக்குகிறார்கள் கட்சியினர். சாமித்தோப்பு அய்யாவழி பாலபிரஜாபதி அடிகளாரும் கூட நாடார் சமூகத்துக்கு மட்டுமே சீட் கொடுக்க வேண்டும் என்கிறார்.
இந்த கடும் எதிர்ப்பால் நிலை குலைந்து போன தளவாய், தனது சமூகத்தைச் சார்ந்த, முதல்வர் எடப்பாடியின் வலதுகரமாக திகழும் நபரைப் பிடித்து தூது அனுப்பி தொகுதியை கேட்டு நச்சரிக்கிறாராம். ஒருவேளை இந்த தேர்தலில் ஜெயித்து மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால், அதில் தான் மட்டுமே மாவட்ட அமைச்சராக அமர வேண்டும் என்ற ஆசையால், கன்னியாகுமரி, நாகர்கோவில் தவிர மீதமுள்ள பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய நான்கு தொகுதிகளையும் பா.ஜ.க.வுக்கு கொடுத்து விடுங்கள் என அந்த சேலம் பிரதிநிதி மூலம் முதல்வரிடம் தூது விட்டுள்ளாராம் தளவாய்" என்பதோடு முடித்துக் கொண்டார்.
Also Read: குமரி: பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் எவை... யாருக்கு சீட்?
source https://www.vikatan.com/news/politics/thalavai-sundaram-issues-with-kanniyakumari-admk-persons
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக