Ad

வியாழன், 18 மார்ச், 2021

14 வயதில் தொல்லுயிரியல் துறையில் அசத்தும் மாணவி... இந்தியாவின் இளம் தொல்லுயிரியலாளர் அஸ்வதா!

தொல்லுயிரியல் துறை என்றால் என்னவென்றே நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால், 14 வயதே ஆன அஸ்வதா பிஜு பள்ளி, கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் என்று பல இடங்களில் தொல்லுயிரியல் துறை குறித்து உரையாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, இதுவரை சுமார் 132 தொல்லுயிரியல் படிமங்களைக் கண்டுபிடித்து தன் வீட்டிலேயே மினி மியூசியம் அமைத்து வைத்திருக்கிறார். ஐந்து வயது இருக்கும்போது, அப்பா வாங்கிக் கொடுத்த என்சைக்ளோபீடியாவில் பார்த்த அம்மோனைட் என்ற படிமத்தின் படத்தைப் பார்த்துவிட்டு அம்மாவிடம் கேட்கவே, அவர் எக்மோர் மியூசியத்திற்கு அழைத்துச் சென்று அங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அம்மோனைட் படிமத்தைக் காட்டியுள்ளார்.

அப்போது தொடங்கிய தொல்லுயிரியல் துறை மீதான ஆர்வத்தில், பல்வேறு நூல்களைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினார். ஆராய்ச்சியாளர்களோடு கலந்துரையாடுவது, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது, பல இடங்களுக்குப் பயணித்து தொல்லுயிரியல் படிமங்களைச் சேகரிப்பது என்று தொடர்ந்து இயங்கி வருகிறார். அதோடு, பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்தத் துறை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், Global Child Prodigy award வாங்கிய இந்தியாவின் இளம் தொல்லுயிரியலாளர் அஸ்வதாவின் முழு வீடியோவை இங்கு பார்க்கலாம்.



source https://www.vikatan.com/news/women/indias-young-paleontologist-aswatha-biju-shares-her-story-in-aval-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக