Ad

புதன், 21 அக்டோபர், 2020

பீகார்: `அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து!’ - பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு #NowAtVikatan

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து!

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. பிரசாரங்கள் ஒருபுறம் அனல் பறக்க, தேர்தலில் வெற்றிபெற கட்சிகள் வகுக்கும் யுத்திகளும் மறுபுறம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று பீகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் தேர்தல் அறிவிப்பாக, தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், ``கொரோனா தடுப்பு மருந்துக்கான அனுமதி கிடைத்ததும், தயாரிப்புகள் வேகம் பெறும். அப்படி கிடைக்கும் மருந்துகள், பா.ஜ.க கூட்டணி வென்று வந்தால் பீகாரின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்” என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகள் நிதீஷ் குமார் முதல்வராக இருக்க பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/general-news/22-10-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக