Ad

புதன், 3 மே, 2023

தங்கம் விலை ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூ.91 உயர்ந்தது!

தங்கம் விலை கடந்த சில தினங்களாக அதிகம் மாற்றமில்லாமல் தான் விற்பனை ஆகி வந்தது. ஆனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.91 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை குறைந்தபட்சமாக ரூ.2 முதல் ரூ.20 வரை ஏறியும் இறங்கியும் விற்பனை ஆகி வந்தது. நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5,615 ஆகவும், பவுன் ஒன்றுக்கு ரூ.44,920 ஆகவும் விற்பனை ஆனது. இந்நிலையில் தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.91 உயர்ந்து ரூ.5,706 ஆகவும், பவுன் ஒன்றுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.

தங்கம் விலை திடீர் உயர்வு!

நேற்று வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனை ஆகி வந்தது. ஆனால் இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.81.80 ஆக விற்பனை ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை புதுப்புது உச்சங்களை தொட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே, இந்தியாவில் அனைத்து சுப நிகழ்வுகளிலும் தங்கத்தை நிச்சயம் தவிர்க்க முடியாது. இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து சுப நாள்கள் வரும்பட்சத்தில் தங்கம் விலை அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



source https://www.vikatan.com/personal-finance/gold/gold-price-increases-rs91-in-one-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக