Ad

சனி, 11 மார்ச், 2023

கொளுத்தும் கோடைக்கு வெரைட்டியான கூல் சாலட்... வீக் எண்டு ஸ்பெஷல்

கொளுத்தும் கோடைக்கு வெறும் திரவ உணவாகவே சாப்பிட்டால் போதும் என்று தோன்றும் பலருக்கும். கோடையில் திரவ உணவுகள் மட்டுமன்றி நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு சரியான தீர்வு சாலட்... உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விதம் விதமான சாலட் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக.... இந்த வார வீக் எண்டை சாலட் ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்.

பேரீச்சம்பழம் கேரட் சாலட்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் - 2 கப்

நீளமாக துருவிய கேரட் - 2 கப்

நீளமாக உரித்த ஆரஞ்சு சுளைகள் - 2 கப்

க்ரீம் சீஸ் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - அரை கப்

லெட்யூஸ் இலைகள் - 6

ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்

பேரீச்சம்பழம் கேரட் சாலட்

செய்முறை:

முதலில் க்ரீம் சீஸ் தயாரித்துக்கொள்ளவும். க்ரீம் சீஸ் ரெடிமேடாகக் கிடைக்கும். இல்லாவிட்டால் கீழ்க்காணும் முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.

கெட்டித் தயிர் - 250 கிராம் (சுமார் 2 கப்) இதை ஒரு மெல்லிய துணியில் (பனீர் வடிகட்டுவது போல்) வடிக்கட்டி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, துணியிலிருந்து எடுத்து, வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நுரைக்க அடிக்கவும். பின்னர், உப்பு, மிளகுத்தூள், ஆரஞ்சு ஜூஸ், நறுக்கிய பேரீச்சம்பழம், துருவிய கேரட், ஃப்ரெஷ் க்ரீம் முதலியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு அடிக்கவும். நன்கு கலந்த பின், சாலட் தட்டில் பரப்பவும்.

முதலில் லெட்யூஸ் இலைகளை ஒரு தட்டில் வட்டமாக அடுக்கி அதன் நடுவில் நாம் தயாரித்த க்ரீம் சீஸ் கலவையைக் கொட்டி, மேலே ஆரஞ்சு சுளைகளைப் பரப்பவும். பேரீச்சம்பழம் கொண்டு அலங்கரிக்கவும். துருவிய கேரட் கொண்டு அலங்கரிக்கலாம். நான்கு நாள்கள் வரை கெடாது.

ரஷ்யன் சாலட்

முதலில் சாலட் க்ரீம் தயாரிக்கலாம்.

தேவையானவை:

ஃபிரெஷ் க்ரீம் – 2 கப்

உப்பு - சிறிதளவு

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்

வெள்ளை வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்

குளிர்ந்த பால் - ஒரு கப்

குளிர்ந்த பாலுடன், ஃபிரெஷ் க்ரீமை மெதுவாகக் கலந்துகொள்ளவும். பின், உப்பு, மிளகுத்தூள், கடுகுப் பொடி, வினிகர் ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும்.

கேரட் - ஒன்று

வெங்காயம் - ஒன்று

குடமிளகாய் - ஒன்று

வெள்ளரிக்காய் - ஒன்று

இவை அனைத்தையும் மெல்லியதாக வட்ட வட்டமாக ஸ்லைஸ் செய்யவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு...

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்

கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்

வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

இவற்றைச் சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

ரஷ்யன் சாலட்

பழங்கள்:

பைனாப்பிள் (துண்டாக நறுக்கியது) - ஒரு கப்

ஆப்பிள் (நீளமாக நறுக்கியது) - ஒரு கப்

விதையில்லாத திராட்சை பழங்கள் (கறுப்பு, பச்சை) - அரை கப்

ஆரஞ்சு சுளைகள் - அரை கப்

வால்நட் - சிறிதளவு

கடைசி ஸ்டெப்:

ஊறவைத்த காய்கறிகள், ரெடியாக உள்ள சாலட் க்ரீம், பழங்கள் முதலியவற்றைக் கலந்து சாலட் பரிமாறும் வாயகன்ற தட்டில் (Salad Platter) பரப்பி, சிறிதளவு வால்நட், பழங்கள்கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

பார்ட்டிகளுக்கு உகந்தது. பார்க்க அழகாகவும், சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த சாலட்டில் காய்கறிகள் வேக வைக்காமலும், பழங்கள் இருப்பதாலும் மிகவும் ஆரோக்கியமானது.

கிரீன் சாலட்

தேவையானவை:

லீக்ஸ் (மெல்லியதாக நீளமாக நறுக்கியது) - ஒரு கப்

செலரி (மெல்லியதாக நீளமாக நறுக்கியது) - ஒரு கப்

வெள்ளரி (மெல்லியதாக நறுக்கியது) - ஒரு கப்

குடமிளகாய் (மெல்லியதாக நறுக்கியது) - ஒரு கப்

நறுக்கிய லெட்யூஸ் - ஒரு கப்

நறுக்கிய பார்ஸ்லி - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சைச்சாறு - கால் கப்

வெள்ளை வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்

கிரீன் சாலட்

செய்முறை:

நறுக்கிய காய்கறிகள், கீரைகளுடன், உப்பு மற்றும், வினிகர், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், கடுகுப் பொடி கலந்து ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.



source https://www.vikatan.com/food/recipes/summer-variety-salad-weekend-special

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக