Ad

வியாழன், 9 மார்ச், 2023

`’தனிமையில் இருக்கலாம் வா’ என்று அழைத்தாள் கிரீஷ்மா' - ஷாரோன் வழக்கின் குற்றப்பத்திரிகை தகவல்கள்

கேரள மாநிலம், பாறசாலை மூல்யங்கரையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷாரோன் ராஜ் என்பவரை அவரின் காதலியான களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மா கொலைச் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கிரீஷ்மா சிறையில் உள்ளார். ஷாரோன்ராஜை கொலைச்செய்யப் போவது கிரீஷ்மாவின் அம்மா சிந்துவுக்கு முன்கூடியே தெரிந்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதுபோன்று கிரீஷ்மாவின் தாய்மாமா நிர்மல்குமார் கொலைக்கான தடயங்களை அழித்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து, நிர்மல்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். காதலன் ஷாரோனை கொலை செய்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு எதிராக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கனவே நெய்யாற்றின்கரை ஜுடிசியல் பஸ்ட் கிளாஸ் மஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்த கிரீஷ்மா

அந்த குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் தற்போது வெளியே வந்துள்ளன. அதில், ``2021 அக்டோபர் மாதம் முதல் கிரீஷ்மாவுக்கும் ஷாரோன் ராஜிக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கும் கிரீஷ்மாவுக்கும் மார்ச் 4-ம் தேதி நிச்சயமான நிலையில் இருவருக்கும் பிணக்கம் ஏற்பட்டது. காதலன் ஷாரோன்ராஜை விலகிச்செல்லுமாறு கிரீஷ்மா சொல்லியுள்ளார். அவர் தன்னைவிட்டு விலகிச்செல்லாததைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் இருவரும் மீண்டும் போன் மூலம் காதலை புதுபித்துள்ளனர். பின்னர், ஷாரோனை கொலைச் செய்ய முடிவு செய்து ஆகஸ்ட் மாதம் முதல் டோலோ மற்றும் பாரசிட்டமால் மாத்திரைகளை ஜூசில் கலந்து கொடுத்துள்ளார். அக்டோபர் மாதம் தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிமருந்தை கலந்துகொடுத்திருக்கிறார் கிரீஷ்மா. பூச்சிமருந்து கலந்த கஷாயம் கொடுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25-ம் தேதி ஷாரோன் இறந்தார்.

கிரீஷ்மா கூகுளில் பலமுறை தேடிப் பர்த்தபிறகே பாரசிட்டமால், டோலோ மாத்திரைகளை ஜூஸில் கலந்துகொடுத்து ஜூஸ் சேலஞ்ச் நடத்தியுள்ளார். பின்னர் ஜூஸில் பூச்சிமருந்து கலந்தால் உடலின் எந்ததெந்த உறுப்புகள் பாதிக்கும் என கிரீஷ்மா கூகுளில் பார்த்து தெரிந்துகொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே ஷாரோன்ராஜை கொலைசெய்யத் திட்டம்தீட்டி வந்ததும், பலமுறை முயன்று இறுதியாக கஷாயத்தில் விஷம் கலந்து கொலை செய்தார். ஷாரோன்ராஜ் இறந்தபிறகு வாட்ஸ்அப் சாட்-களை மொபைலில் இருந்து அழித்துவிட்டார். அழித்த மெசேஜ்களை திரும்பவும் எடுக்க முடியுமா என்பது பற்றியும் யூ டியூபில் தேடி தெரிந்திருக்கிறார்.

கிரீஷ்மா, ஷாரோன்ராஜ்

கிரீஷ்மாவும் ஷாரோன்ராஜிம் பலமுறை தனிமையில் இருந்திருக்கிறார்கள். 2022 அக்டோபர் 14-ம் தேதி கிரீஷ்மா தனது காதலன் ஷாரோன் ராஜை வீட்டுக்கு அழைத்து விஷம் கொடுத்தார். இதற்காக முந்தினநாள் இரவு சுமார் ஒரு மணிநேரம் 7 நிமிடம் போனில் செக்ஸ் தொடர்பான விஷயங்களை கிரீஷ்மா பேசியுள்ளார். மறுநாள் காலையில் தனிமையில் இருப்பதற்காக ஷாரோனை வீட்டுக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை ஐ.சி.யு-வில் சிகிச்சையில் இருந்த ஷாரோன்ராஜ் தனது உறவினர் ஒருவரிடம் கூறி உள்ளார். அக்டோபர் 14-ம் தேதி காலை 7.35 மணி முதலே தனிமையில் இருக்கலாம் வா என கிரீஷ்மா தன்னை வீட்டுக்கு அழைத்தார். அதனால்தான் நான் கிரீஷ்மாவின் வீட்டுக்குச் சென்றேன். எனக்கு அவள் விஷம் கொடுத்துவிட்டார். இனி நான் இறந்துவிடுவேன் என ஐ.சி.யு பிரிவில் சிகிச்சையில் இருந்த ஷாரோன் ராஜ் அழுதுகொண்டே தனது உறவினர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார்.

ஷாரோனை கொலைச் செய்ய முடிவு செய்த பிறகு பாரசிட்டமால், டோலோ மாத்திரைகளை தண்ணீரில் கலந்து தனது பையில் எப்போதும் கிரீஷ்மா வைத்திருந்தார். அடிக்கடி ஜூசில் இந்த மாத்திரைகளை கலந்துகொடுத்தும் ஷாரோன்ராஜை ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதால் தனியாக இருக்கலாம் என அழைத்து பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்துகொடுத்துள்ளார்" இவ்வாறு குற்றப்பிரிவு போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/crime/charge-sheet-details-of-kirishma-sharon-raj-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக