Ad

வெள்ளி, 3 மார்ச், 2023

தீவிர இதயத்துடிப்பால் அவதிப்பட்ட நோயாளி; சென்னை மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சை!

சென்னையில், இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) பிரச்னை இருந்த 42 வயது நோயாளிக்கு, இதய மின் உடலியங்கியல் இடையீட்டு செயல்முறை சிகிச்சையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டு, அவரை காப்பாற்றி இருக்கிறது.

இதயத்தின் கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா) என்பது, இதயத் துடிப்பின்மை எனவும் அறியப்படுகிறது. இதயத்தின் கீழறைகளின் மின்சார சார்ட் சர்கியூட்களில் தோன்றும் இது, அதிவேகமாகக் கடத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு படபடப்பு, தலைச்சுற்றல், வலிப்பு போன்ற தாக்கங்கள் வழக்கமாக ஏற்படுகின்றன. சில நேரங்களில் மாரடைப்புகூட ஏற்படக்கூடும்.

காவேரி மருத்துவமனை

இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 42 வயதான நோயாளி ஒருவர், உயிருக்கு மிகவும் ஆபத்தான தீவிர இதயத்துடிப்பு பிரச்னையுடன் சென்னை காவேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதயக்கீழறையில் அதிக இதயத்துடிப்பு (வென்ட்ரிகுலர் டாக்ரிக்கார்டியா - VT) பிரச்னை இருப்பது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஈசிஜி பரிசோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு, இதய மின் உடலியங்கியல் (Cardiac Blectrophysiology) இடையீட்டு செயல்முறையை, சென்னை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. மரபியல் ரீதியாக ஏற்பட்டிருந்த இப்பிரச்னையை சரி செய்வதற்காக மிகச்சிறிய ஊடுருவல் முறையில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, சுமார் ஆறு மணி நேரம் வரை நீடித்தது.

heart

நோயாளிக்கு இதய மின் உடலியங்கியல் மருந்துவர்கள் மின் உடலியங்கியல் (EP) ஆய்வுகளை மேற்கொண்டனர். நோயாளியின் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்குக் கொண்டு வர, ரேடியோ ஃபிரீக்வன்சி அப்லேஷன் ரேடியோ அதிர்வெண் அகற்றல் (RFA) என அழைக்கப்படும் ஓர் இதய இடையீட்டு மருத்துவச் செயல்முறையை மேற்கொண்டனர். எதிர்காலத்தில் துடிப்பின்மை மீண்டும் வராமல் தடுக்க, இன்ட்ரா கார்டியாக் ஃபைப்ரிலேட்டர் (CD) என்ற சாதனமும் அவருக்குப் பொருத்தப்பட்டது.

இது குறித்து, காவேரி மருத்துவமனையின் கார்டியாக் எலெக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் மருத்துவர் தீப் சந்த் ராஜா கூறியதாவது: நோயாளிக்கு, இதயத்தின் வலது கீழறையில் மரபியல் ரீதியிலான இதயத்தசை நோய் (ARVD) என்ற பாதிப்பு இருந்தது. இத்தகைய பாதிப்பு நிலையில் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இதயத்தின் மின் கடத்தல் அமைப்பில் குறுக்கிணைவுகள் உருவாகும்.

காவேரி மருத்துவமனையின் கார்டியாக் எலெக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் மருத்துவர் தீப் சந்த் ராஜா

சிக்கலான ஒரு மருத்துவச் செயல்முறையை இவருக்கு மேற்கொண்டோம். ஹைபிரிட் அறுவை சிகிச்சை அறையில் மேற்கொள்ளப்பட்ட இச்செயல்முறையில் மிகக்குறைந்த ஊடுருவல் அணுகுமுறையைக் கொண்டு இதயத்தின் உட்புற மற்றும் வெளிப்புறப் பரப்புகள் இரண்டிலும் இருந்து சார்ட் சர்கியூட்கள் எனப்படும் குறுக்கிணைவுகளை அகற்றினோம். வெற்றிகரமான இந்தச் சிகிச்சைக்குப் பிறகு அதே நாளில் நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச சாதனம் அகற்றப்பட்டது" என்றார்.

சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறும்போது, ``மரபியல் ரீதியான இதய வலுவிழப்பு என்பது பிறப்பிலிருந்தே தொடங்குகின்ற ஒரு பாதிப்பு நிலையாகும். நடுத்தர வயதினர் மத்தியில் திடீரென இதயச் செயலிழப்பு / மாரடைப்பு போன்று நிகழ்வுகள் நடைபெறுவதற்கான முதன்மையான காரணங்களுள் இதுவும் ஒன்று.

காவேரி மருத்துவமனை

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் துடிப்போடும், விவேகத்தோடும் எங்கள் மருத்துவக் குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டனர்" என்றார்.

சிகிச்சைக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பிய அந்த நோயாளி, தற்போது வழக்கம் போல் தனது பணியைத் தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/health/kauvery-hospital-successfully-treated-a-patient-suffering-from-heart-diseases

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக