Ad

வெள்ளி, 10 மார்ச், 2023

ம.பி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; புல்டோசர் ஆக்‌ஷன் எடுத்த பெண் காவலர்கள்! - நடந்தது என்ன?

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் புல்டோசர் கலாசாரம் அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புல்டோசர் பாபா என்றுதான் அழைக்கின்றனர். எந்த ஒரு குற்றத்தில் ஈடுபட்டாலும் சந்தப்பட்ட நபரின் வீடு அல்லது இடங்களில் சட்டவிரோதமாக இருக்கும் கட்டமைப்புகளை புல்டோசரைக்கொண்டு உடனடியாக இடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த கலாசாரம் இப்போது அருகில் உள்ள மத்திய பிரதேசத்திற்கும் பரவியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் தமோஹ் என்ற இடத்தை சேர்ந்தவர் கெளஷல் கிஷோர். கிஷோரும் அவரின் நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து அங்குள்ள மைனர் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தனர்.

இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். நான்காவதாக கிஷோர் தப்பி ஓடிவிட்டார். இதனிடையே, கிஷோர் தமோஹ் நகரில் அரசு நிலத்தை அபகரித்து வீடு கட்டி இருந்தார். அவரின் வீட்டை பெண் காவலர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர். பெண் காவலர்களே புல்டோசரை இயக்கினர். இது போன்ற நடவடிக்கை தொடரும் என்றும், பெண் காவலர்கள் சிறப்பான பணியை செய்துள்ளனர் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரஷிதா குர்மி தெரிவித்தார். அதோடு தலைமறைவாக கிருந்த கிஷோர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் தன்னை திருமணம் செய்யும் படி கேட்ட பெண்ணை பொது இடத்தில் அடித்து உதைத்த பங்கஜ் என்பவரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்கும்படி முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டார். இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரேவா என்ற இடத்தில் பெண் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. பாதிக்கப்பட்ட பெண் தனது தோழிகளுடன் கோயிலுக்கு சென்ற போது கோயில் அருகில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இக்குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/crime/rape-of-minor-girl-female-cops-bulldoze-accuseds-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக