Ad

வெள்ளி, 5 மார்ச், 2021

Learning-ஆ செல்வராகவன்... வேற லெவல்ல ஹாரர் பண்ணிட்டியே நண்பா! 'நெஞ்சம் மறப்பதில்லை' + - ரிப்போர்ட்

பல கோடிகளுக்கு அதிபதியான முதலாளியின் மகளை கரெக்ட் செய்து, கல்யாணமும் முடித்து, கொண்டாட்டமாக வாழலாம் என நினைக்கும் தொழிலாளி டு முதலாளி ராம்சே என்கிற ராமசாமியின் கதையே 'நெஞ்சம் மறப்பதில்லை'.

'சொத்து இருந்தாலும் சுகம் இல்லையே' என ராமசாமியின் வாழ்க்கையில் தாம்பத்யம் தகுடுதத்தம் ஆடுகிறது. தொழிலதிபரின் மகளை சொத்துக்காக கரெக்ட் செய்தவர், வீட்டு வேலைக்காரியை ஆசைக்காக கரெக்ட் செய்யத்துடிக்கிறார். அதனால் நேரும் பிரச்னைகளும், அதன்பின் நடக்கும் அமானுஷ்யங்களையும் செல்வராகவன் எப்படி சொல்லியிருக்கார்னா?!

பேய்ப்படங்கள் அணிவகுத்து வந்த சீசனில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. ஆனால், நல்ல நேரமாக இப்போது எந்தப் படமும் இல்லாததால் தனித்து நிற்கிறது. பேய் படங்களுக்கு எப்போதும் பலம் சேர்ப்பவை பின்னணி இசையும், ஒளிப்பதிவும்தான். அந்த வகையில் இந்தப் படத்தின் ஹீரோக்கள் யுவனும், அரவிந்த் கிருஷ்ணாவும்.

'புதுப்பேட்டை'க்குப் பின், ஐந்தாவது முறையாக செல்வாவுடன் இணைந்திருக்கிறார் அரவிந்த் கிருஷ்ணா. அவரின் மேஜிக் பக்காவாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. வித்தியாசமான லைட்டிங், ஆங்கிள் என ஒவ்வொரு ஃபிரேமிலும் அரவிந்த் கிருஷ்ணாவின் உழைப்பு தெரிகிறது. பின்னணி இசை என்றால் யுவன்தான் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். படத்தில் வரும் எல்லா பாடல்களிலும் யுவனின் குரல் இருக்கிறது. படம் முடிந்த பின்னரும் நம்முடன் பயணிக்கிறது யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை.

எஸ்.ஜே.சூர்யா

ராமசாமி டு ராம்சேவாக எஸ்.ஜே. சூர்யா. அர்மானி சூட்டுக்குள் ஒளிந்திருக்கும் அழுக்கு மனிதனாக நடித்திருக்கிறார். விசித்திரமான கதாபாத்திரம் , அதை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார். ஆனால், பல இடங்களில் தாம்பரத்தைத் தாண்டி திண்டிவனம் வரை நீளும் அவரின் ஓவர் ஆக்டிங்கைத்தான் பொறுக்க முடியவில்லை. நடிங்க நண்பா... ஆனா, ரொம்ம்ம்ப நடிக்காதீங்க நண்பா!

படத்தில் மீதம் இருப்பது பத்து கதாபாத்திரங்கள்தான். பேபி சிட்டர் மரியமாக ரெஜினா. அன்பே உருவான கதாபாத்திரம் டூ பழிவாங்கும் காட்சி வரை சிறப்பு. பணக்காரப் பாசக்காரியாக, வேஷக்காரியாக, ரோஷக்காரியாக ஓரளவு சரியாகவே நடித்திருக்கிறார் நந்திதா. எஸ்.ஜே. சூர்யாவின் நண்பராக வரும் சிவகுமாரும், சர்ச் சிஸ்டராக வரும் கமலா கிருஷ்ணசாமியும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மிகவும் அரதப் பழைய பேய் பட பழிவாங்கல் ஒன்லைனை கையில் எடுத்திருக்கிறார் செல்வராகவன். சில இடங்களில் வரும் மேஜிக்கல் ரைட்டிங் மட்டுமே படத்தை ஈர்க்க வைக்கிறது. ஆனால், அதுவும் போகப் போக நம்மை சோதிக்கிறது. ஃபேன்டஸி அதிகமாக அதிகமாக 'என்னாங்கடா இது' என சொல்லவைக்கிறது படம். அதிலும் அந்த க்ளைமேக்ஸ் ஃபைட் ... Learning- ஆ செல்வராகவன்?!

நெஞ்சம் மறப்பதில்லை

நா. முத்துகுமார் இல்லாததால் எல்லா பாடல்களுமே செல்வாதான். 'பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா' பாடல் பால்ய கால செல்வா, யுவன் , கல்யாண் ட்ரீட்.

இரண்டாம் உலகத்தில் வரும் நாய் போலவே , இதிலும் சில கதாபாத்திரங்களை உலவவிட்டிருக்கிறார் செல்வா. ஆனால், அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

செல்வராகவன், தான் பார்ட்டியில் சந்தித்த புதுப்பணக்காரனின் அலப்பறைகளை வைத்து கதையை உருவாக்கியிருப்பார் போல. எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், எந்த திருப்பமும் இல்லாமல், எந்தத் தெளிவும் இல்லாமல் காட்சிகள் வெறுமனே கடந்துபோகின்றன. பேய் படம்கிறதை நியாயப்படுத்த ஒரு காட்சியாவது பயமுறத்த வேண்டாமா இயக்குநரே?!

மீண்டு வாங்க செல்வா... வி ஆர் வெயிட்டிங் நண்பா!



source https://cinema.vikatan.com/tamil-cinema/selvaraghavans-nenjam-marapadhillai-movie-plus-minus-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக