"அரியர் வைத்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றிய முதல்வர் எடப்பாடிக்கு நாங்கள் வழங்கிய 'ஆல் பாஸ் முதல்வர்' பட்டத்தை திரும்பப் பெறுகிறோம்" என்று, தமிழக அரசியல் முற்போக்கு கட்சி என்ற அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பான தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியர் மாணவர்களின் கோரிக்கைக்காக ஒரு கட்சியா? என்ற ஆச்சரியத்துடன் இவ்வமைப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்புக்கு சென்றோம்.
செய்தியாளர்களிடம் பேசிய இக்கட்சியின் தலைவர் முனீஸ், "இளைஞர்களுக்கான எங்கள் கட்சியில் அனைத்து மாவட்டத்திலும் பொறுப்பாளர்கள் உள்ளனர். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே 234 தொகுதியிலும் போட்டியிடுகிறோம்.
இப்போதுள்ள அரசியல் கட்சிகள் ஜாதி, மதம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. அதனால், தமிழகம் முழுவதும் போட்டியிடுகிறோம். குறிப்பாக விஐபி வேட்பாளர்களுக்கு எதிராக நிச்சயம் போட்டியிடுவோம்.
அரியர் வழக்கால் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் எங்களை ஆதரிக்கின்றனர். அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஆல் பாஸ் என கூறி ஏமாற்றிவிட்டு ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதிய பின்னரே தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதல்வர் எடப்பாடிக்கு, நாங்கள் அளித்த 'ஆல்பாஸ் முதல்வர்' என்ற பட்டத்தை திரும்பபெற்று விட்டோம்’ என்றார் படபடவென்று.
source https://www.vikatan.com/news/politics/youth-group-says-we-with-draw-the-title-we-gave-to-cm-palanisamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக