'இயற்கை', ' பேராண்மை', ' ஈ', 'பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை' எனப் பல முக்கியமானப் படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். கம்யூனிச சிந்தனையாளரான ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' படத்தை இயக்கிவருகிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் முக்கியமான அரசியல், பொதுவுடமை கருத்துகளைக் கையாளும் ஜனநாதன் 'லாபம்' படத்தில் விவசாயத்தில் நுழைந்திருக்கும் கார்ப்பரேட் அரசியல் குறித்து பேசியிருக்கிறார்.
நேற்று(11-03-2021) இந்தப்படத்தின் எடிட்டிங் பணிகளில் இருந்தவர் மதியம் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டில் அவர் தனியாகத்தான் வசிக்கிறார். நீண்டநேரமாகியும் எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு ஜனநாதன் திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்றுபார்த்தபோது மயங்கிய நிலையில், உடல் அசைவுகள் எதுவும் இன்றி இருந்திருக்கிறார் ஜனநாதன். உடனடியாக அப்பலோவுக்கு தகவல் சொல்லப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள்.
''மூளைக்குசெல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தற்போது ஜனநாதன் சார் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு மருத்துவர் வருவார் என சொல்லியிருக்கிறார்கள். அவர் வந்துபார்த்தப்பிறகுதான் என்ன பிரச்னை என்பது குறித்த சரியான விவரங்கள் தெரியும்'' என்றார் ஜனநாதனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி.
ஜனநாதன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்து அவருக்கு பல உதவிகள் செய்துவந்தார். பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜனநாதன் இயக்க, தன் நண்பருடன் சேர்ந்து 'லாபம்' படத்தை தயாரித்து வந்தார் விஜய்சேதுபதி. படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில் ஜனநாதன் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/director-sp-jananathan-is-critical-admitted-at-appollo-hospitals-due-to-brain-stroke
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக