Ad

வியாழன், 4 மார்ச், 2021

சொத்து குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: திமுக-வின் பரப்புரை பிளான்; அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி

சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியுள்ளதால், இவ்வழக்கின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. அதே நேரம் தேர்தல் நேரத்தில் இந்த வழக்கை வைத்து தி.மு.க-வினர் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளது ராஜேந்திர பாலாஜிய அப்செட் ஆக்கியுள்ளது என்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த 2011-2013 காலகட்டத்தில், வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதை விசாரிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்க, இப்புகாரை விசாரிக்காமல் முடித்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 2014- ல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இப்புக்காரில் முகாந்திரம் உள்ளதா என்று எஸ்.பி.அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி இப்புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜேந்திர பாலாஜி

லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துவிட்ட நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளி வைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு தீர்ப்பளித்தது.

"மனுதாரரின் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யலாம்'' என்று நீதிபதி சத்தியநாராயணாவும், ''புகாரில் முகாந்திரம் இல்லை. வழக்குப் பதிவு செய்ய தேவையில்லை'' என்று நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட உத்தரவினால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்ல உள்ளது.

ராஜேந்திர பாலாஜி!

இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வரும் என்று தி.மு.க-வினர் கூறி வருகிறார்கள். தி.மு.க தலைமையால் தோற்கடிக்க வேண்டியவர்கள் பட்டியலில் இருப்பதாக சொல்லப்படும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, இந்த விவகாரத்தை பரப்புரை செய்ய உள்ளார்கள்.

ஏற்கனவே இந்த வழக்கிலிருந்து விடுபட முக்கிய கோயில்களில் பரிகார பூஜைகள் செய்து வந்த ராஜேந்திர பாலாஜி. உள்கட்சி பிரச்னையால் விருதுநகர் மாவட்டத்தில் தொகுதியை தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்திலுள்ள நிலையில், இந்த மாறுபட்ட தீர்ப்பால் ரொம்பவும் அப்செட் ஆக்கியுள்ளார் ராஜேந்திர பாலாஜி என்கிறார்கள்.

Also Read: சசிகலாவுக்காக யாக பூஜையில் கலந்துகொண்டாரா ராஜேந்திர பாலாஜி? - கும்பகோணம் பரபரப்பு



source https://www.vikatan.com/news/politics/rajendra-balaji-case-judgment-dmks-plan-minister-upset

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக