Ad

சனி, 21 நவம்பர், 2020

ஹிமாச்சல்: கிராமத்தில், ஒரே ஒருவதைத் தவிர அனைவருக்கும் கொரோனா... தொற்று பரவியது எப்படி?!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் கோரதாண்டவம் இன்னும் அடங்கவில்லை. ஆனால், கடந்த சில நாள்களாக, நாளொன்றுக்கு 50,000-த்துக்கும் குறைவானவர்களே கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், ஹிமச்சல பிரதேச மாநிலத்தில் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள தோரங் (Thorang) என்கிற கிராமத்தில் வசித்து வரும் மக்களில், ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி ஹிமாச்சல மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதித்த தோரங் கிராமம், ஹிமாச்சல் பிரதேஷ்

Also Read: டெல்லியைவிட்டு வெளியேறிய சோனியா காந்தி... கோவாவில் வசிக்கத் திட்டம்! - என்ன காரணம்?

ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள லாஹல்-ஸ்பிதி (Lahaul and Spiti) மாவட்டத்தில் இதுவரை 909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 425 பேர் மட்டுமே தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்த கொண்டே வந்தது. இந்தநிலையில், கடந்த மாதம் லாஹல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள ரங்ரிக் (Rangrik) கிராமத்தில் 40 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. அந்த 40 பேரும் மணாலியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சி மூலமாகத்தான் 40 பேருக்கும் கொரோனா தொற்று பரவியது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் கூறினர்.

இந்தநிலையில், ஹிமச்சல பிரதேச மாநிலம், லாஹல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள மற்றொரு கிராமமான தோரங் கிராமத்தில் வசித்து வரும் 42 பேரில், 41 பேருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ``கடந்த 2-3 மாதங்களாக இந்தக் கிராமத்திலிருந்த ஒருவருக்குகூட கொரோனா தொற்று இல்லை. இப்போது அதுவே தலைகீழாக மாறியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக குலு பகுதிக்குச் சென்றுவிட்டனர். இல்லையென்றால் இன்னும் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்'' என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தோரங் கிராம மக்களுக்கு கொரோனா பரவியதற்கான காரணமாக அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ ராம் லால் மார்கண்டா (Ram Lal Markanda) கூறியிருப்பது பின்வருமாறு.

அடல் சுரங்கப்பாதை

Also Read: `உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை!'- அடல் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி #NowAtVikatan

மேலும் இது குறித்துப் பேசியிருக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள், ``தோரங் கிராமத்துக்கு வரும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதுமே சுகாதாரத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நடுத்தர வயதுடைய ஒருவருக்கும் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பில்லை. அவரும் பாதுகாப்பாக இருக்கிறார்'' என்று கூறியுள்ளனர்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/entire-village-in-himachal-is-affected-by-corona-except-one

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக