Ad

சனி, 21 நவம்பர், 2020

ஊட்டி: மின்வேலியா... வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்கா? - காட்டுமாடு இறப்பில் குழம்பும் வனத்துறை

ஊட்டி மிஷினரிஹில் பகுதியில் விவசாய நிலத்தில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுமாடு உயிரிழந்து கிடந்தது. மின்சாரம் தாக்கி இறந்ததா அல்லது அளவுக்கு அதிகமாக குடலில் இருந்த பிளாஸ்டிக் காரணமா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

indian gaur

நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளன. ஊட்டி நகரை ஒட்டி அமைந்துள்ள தொட்டபெட்டா, டைகர்ஹில் வனப்பகுதிகளில் காட்டுமாடுகள் அதிகமாக உள்ளன. இவை அவ்வப்போது ஊட்டி நகருக்கும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து செல்கின்றன.

இந்த நிலையில், ஊட்டி மிஷினரிஹில் பகுதியில் உள்ள மலைகாய்கறி விளை நிலத்தில் காட்டுமாடு ஒன்று இறந்து கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நீலகிரி கோட்ட உதவி வன பாதுகாவலர் மற்றும் வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டுமாட்டின் உடலை பார்வையிட்டனர்.

forest department

விளை நிலத்தில் உள்ள வேலியின் மீது விழுந்த நிலையில் இறந்து கிடந்தது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, புதைக்கப்பட்டது.

காட்டுமாடு உயிரிழப்பு குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், "இறந்தது ஒரு ஆண் காட்டுமாடு. சுமார் 10 வயது இருக்கக்கூடும். மின்வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும், இதன் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருப்பது, பிரேத பரிசோதனை செய்த போது கண்டறியப்பட்டது

forest department

ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே உரிய காரணம் தெரியவரும். சம்பந்தப்பட்ட நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் ராஜேந்திரன் என்பவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/animals/indain-gaur-found-dead-in-vegetable-farm-in-ooty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக