Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

உ.பி: கணவருக்கு மாதம்தோறும் ரூ.1,000 பரமாரிப்புத் தொகை! - மனைவிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலவருடங்களாகப் பிரிந்துவாழும் கணவருக்கு மாதம்தோறும் பராமரிப்புத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பல ஆண்டுகளாகத் தாம் மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான தனது மனைவியிடமிருந்து மாதம்தோறும் பராமரிப்புத் தொகை பெற்றுத் தர வேண்டும் என குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்து திருமணச் சட்டம், 1955-ன் படி ஓய்வூதியம் பெற்று வரும் தனது மனைவி, மாதாந்திர பராமரிப்புத் தொகை அளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கடந்த 2013-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தீர்ப்பு

இந்து திருமணச் சட்டம் 1955-ன் விதிகளின்படி கணவன் தாக்கல் செய்திருந்த மனுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, முஸாஃபர்நகர் குடும்பநல நீதிமன்றம், இந்த வழக்கில் கடந்த புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது.

Also Read: `டிக்டாக் காதல்; திடீர் திருமணம்; கருக்கலைப்பு!’ -சாதியைக் காரணம் காட்டி விரட்டப்பட்ட சிறுமி

தீர்ப்பில், அரசு ஓய்வூதியதாரரான அந்தப் பெண், மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.12,000 பெற்று வருவதால், பிரிந்துவாழும் தனது கணவருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணம்

இந்து திருமணச் சட்டம் 1955-ன் கீழ் விவாகரத்துக்குப் பின் கணவன், மனைவிக்கு, உதவித் தொகை கோர உரிமையுள்ளது. 1955-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்து திருமணச் சட்டம், பல்வேறு பழைய நடைமுறைகளுக்கு முடிவு கட்டியது.



source https://www.vikatan.com/news/india/up-family-court-orders-wife-to-pay-rs-1000-monthly-maintenance-allowance-to-husband

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக