Ad

வியாழன், 6 ஜூலை, 2023

மபல பயனபடததவதல ஏறபடம டக நக' பரசன: வடபட எளய பயறசகள வளககம மரததவர!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் படிப்பு, அலுவல், பொழுதுபோக்குக் காரணங்களால் மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அதிக நேரம் இவற்றில் ஆழ்ந்திருக்கும்போது சிலருக்குக் கழுத்து வலி ஏற்படுகிறது. இதை ’டெக் நெக் (Tech Neck)’ அல்லது ’டெக்ஸ்ட் நெக்(Text Neck Syndrome)’ என்கிறோம்.

ஆர்த்தோ மருத்துவர் தினேஷ் சௌத்ரி

இத்தகைய கழுத்து வலியில் இருந்து விடுபட, எந்த மாதிரியான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி எலும்பியல் மருத்துவர் தினேஷ் சௌத்ரியிடம் பேசினோம்.

``அனைவரிடமும் மொபைல்போன்கள் இருப்பதால், இதை அதிக நேரம் பயன்படுத்துவதுடன் தவறான நிலையில் (position) உட்கார்ந்து பார்ப்பார்கள். அதிக நேரம் கழுத்துப் பகுதியை முன்னோக்கி வைத்திருந்து மொபைல்போன்களை பயன்படுத்தினால், அதை டெக்ஸ்ட் நெக் அல்லது டெக் நெக் சிண்ட்ரோம் என்கிறோம்.

எப்போதும் முதுகெலும்பு நிமிர்ந்த நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 30° முன்னோக்கி வந்தாலே, கிட்டத்தட்ட 40 பவுண்ட்ஸ் எடையை கழுத்துப் பகுதியில் கொண்டு வருகிறோம். மொபைல் போன்களை பயன்படுத்தும்போது, நமது கழுத்துப் பகுதி 60° முன்னோக்கி வருகிறது. அப்படியென்றால் கிட்டத்தட்ட 60 பவுண்ட்ஸ் (30 கிலோ) எடையை கழுத்துப் பகுதியில் கொண்டு வருகிறோம்.

டெக் நெக் உடற்பயிற்சி

அலுவலகத்தில், ஒரே நிலையில் அமர்ந்தவாறு மடிக்கணினி, மொபைல் ஆகியவற்றை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. 45 நிமிடங்களுக்கு ஒருமுறை அமரும் நிலையை மாற்றிக் கொள்வதும் சிறந்தது.

1- 2 மணிநேரத்துக்கு ஒருமுறை அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து, கழுத்துப் பகுதியில் உருவாகும் வலியைப் போக்கி, கழுத்துப் பகுதியை வலிமையாக வைத்துக் கொள்ள ஒரு சில உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அதோடு சிறிது தூரம் நடைப்பயிற்சியும் மேற்கொள்ளலாம். ஒருசிலர், தலையணையை கழுத்துப் பகுதிக்கு தாங்கலாகப் பயன்படுத்துவர்.

கழுத்துப் பகுதி தசைக்கான உடற்பயிற்சி

அதுமட்டுமல்லாமல், மடிக்கணினியில் வேலை செய்யும் போது, பின்பக்கம் சாய்வுள்ள நாற்காலியைத் தேர்வு செய்யுங்கள். கண் நேராகப் பார்க்கும் உயரத்தில் மடிக்கணினியை வைத்துக் கொள்ளுங்கள். கழுத்து வலிக்கு ஹாட் வாட்டர் பேக் மற்றும் ஐஸ் வாட்டர் பேக் இரண்டையும் மாற்றி மாற்றி வைத்து ஒற்றடம் கொடுத்து வரலாம்.

டெக் நெக் பிரச்னையை சரிசெய்ய, பின்வரும் ஒரு சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

* கழுத்துப் பகுதி தசைக்கான உடற்பயிற்சி:

வலது கையை தலைமீது வைத்து வலப்பக்கமாக தலையை சாய்த்து அழுத்தி 5 நொடிகள் அதே நிலையில் இருக்கலாம். இதே போல இடப்பக்கமும் செய்ய வேண்டும். இதனால் கழுத்துப் பகுதியில் இருக்கும் தசைகள் மற்றும் பின்கழுத்துத் தசைகள் வலுப் பெறும்.

* ரத்த ஓட்டம் சீராக:

தோள்பட்டையை முன்பக்கபாகவும் பின்பக்கமாகவும் 5 முறை, 10 கவுன்ட் வீதம் சுழற்றலாம். இதை செய்வதன் மூலம் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

சின்டக்

* சின்டக்:

இரு விரல்களை தாடையில் வைத்து அழுத்தி தலைப்பகுதியை பின்பக்கமாக சிறிது நேரம் வைத்துக்கொள்ளுங்கள். இதை 5 முறை செய்ய வேண்டும்.

* கழுத்துப்பகுதி வலுப்பெற உடற்பயிற்சி:

தலையை பின்னாகக் கொண்டு சென்று இரண்டு கைகளை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். 10 நொடிகள் அதே நிலையில் இருக்க வேண்டும். 5 முறை இதைச் செய்ய வேண்டும்.

மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியிலிருந்து விடுபடலாம்.



source https://www.vikatan.com/health/tech-neck-problem-doctor-explains-simple-exercise-to-get-rid-of

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக