Ad

வியாழன், 6 ஜூலை, 2023

தரட பகம தககளகள... பதகபப பலபபடததம வயபரகள..!

இந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக கிட்டத்தட்ட தங்கத்துக்கு ஈடாக தக்காளி விலை உள்ளதாக மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். ஒரு கிலோ தக்காளி ரூ.100, ரூ.200 என விற்பனையாகி வருகிறது. தக்காளி வாங்குவதற்கு வரி கட்டும் அளவுக்கு அதன் விலை விண்ணைத்தொட்டு வருகிறது. வாங்குபவர்களுக்கே இப்படி என்றால் அதை விற்பனை செய்பவர்களின் நிலை சொல்லவா வேண்டும். அப்படி ஒருவர் தன் கடையில் தக்காளி திருடு போகாமல் இருக்க கடை முழுவதும் சிசிடிவி கேமரா வாங்கி பொருத்தியுள்ளார்.

தக்காளி

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அக்கிஅலுரு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவர் ஒரு விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில் தக்காளியை விற்பனை செய்வதால், தக்காளி திருடு போகமல் இருக்க தனது கடை முழுவதும் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளார் கிருஷ்ணப்பா.

இது பற்றி அவர் கூறுகையில், “தற்போது தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், அத்தியாவசிய பொருள் என்பதால் அதை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளியை திருடுவதற்காக ஒரு தனி கூட்டம் சுற்றுகிறது. வாடிக்கையாளர்கள் சிலர் மேலும் கூடுதல் தக்காளி கொடுக்குமாறு தகராறு செய்கிறார்கள். இது போன்ற பிரச்சினையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கண்காணிப்பு கேமரா பொறுத்தியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

தக்காளி

இதற்கு நேர்மாறான ஒரு சம்பவமும் அதே கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணையில் இருந்து அடையாளம் தெரியாத சிலர் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பண்ணையில் அடையாளம் தெரியாத சிலர் 50-60 பைகளுடன் நுழைந்து இரவோடு இரவாக ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளிகளை திருடிவிட்டு தப்பிச்சென்றனர்.

பண்ணைக்கு வந்த விவசாயி தரணி, தக்காளி திருடு போனதைக் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் ஹலேபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/agriculture/surveillance-camera-in-the-store-for-the-safety-of-tomatoes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக