தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நேற்று(11-07-2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜகந்நாதன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ராஜாராமன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடந்த சில வாரங்களாகவே, குறிப்பிட்ட மளிகை பொருள்கள் மற்றும் காய்கறி விலை கடுமையாக அதிகரித்தது. குறிப்பாக, தக்காளி விலை ரூ.110-ரூ.150 வரை விற்பனை ஆனது. மற்ற காய்கறிகளும் சதமடித்தன. இவற்றுடன் மளிகைப் பொருட்களான பருப்பு வகைகளின் விலையும் அதிகரித்தது. இந்த விலைவாசி உயர்வால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இதை சரிசெய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நடத்தினார்.
என்ன தீர்வுகள்?
கூட்டுறவு துறை சார்பாக தக்காளி விலையினை கட்டுப்படுத்த சிறப்பு விற்பனை தொடங்கும். காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட மளிகைப் பொருள்கள் அனைத்தும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அங்காடிகளிலும் நியாய விலை கடைகளிலும் சந்தை விலையை விட குறைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள்கள் பதுக்கப்படுவதைக் கடுமையாக கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க, குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கோவிட் காலத்தில் நடமாடும் காய்கறிகள் அங்காடிகள் செயல்பட்டது போல், தற்போது செயல்படுத்த முடுவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதிலும் செயல்படும் பண்ணை பசுமை அங்காடிகள் மூலமாக தக்காளி சிறிய வெங்காயம், கொள்முதல் செய்யப்படவும், கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை சந்தை விலையை விட குறைவான விலையில் கொடுக்கவும் எடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 300 நியாய விலை நியாய விலை கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்பட்டு, நடமாடும் காய்கறி அங்காடிகள் நகரப் பகுதியில் காய்கறி விற்பனை மேற்கொள்ளப்படும் என்னும் முடிவுகள் ஆய்வுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தக்காளி மட்டுமல்லாது, விலை ஏற்றத்தால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் மற்ற அத்தியாவசிய மளிகைப் பொருள்களையும் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டுமென விகடன் டிஜிட்டல் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/governance/what-is-the-government-action-on-the-price-hike-for-vegetables-and-groceries
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக