Tamil News Update
Ad
வியாழன், 13 ஜூலை, 2023
இடம் மாறும் சென்னை செல்ஃபி பாயின்ட் | 3,000 கோழிகள் உயிரிழப்பு - News in Photos
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் ஆடித் திருக்கல்யாண விழா கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பக் கல்வி இயக்க வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி பொறியியல் சேர்க்கை 2023-ம் ஆண்டு அட்டவணையை வெளியிட்டார்.
சென்னை: கலங்கரை விளக்கம் அருகே மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் `நம்ம சென்னை' செல்ஃபி பாயின்ட் வேறொரு இடத்துக்கு மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது.
கடலூர்: மாநகராட்சியில், கலைஞர் மகளிர் உதவித் திட்ட முகாம் அலுவலர்களுக்கு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
வேலூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் 4.0 தொழில்நுட்ப மையத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
கோவை: பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர்: போக்குவரத்து காவல்துறையினர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களை மது போதையில் இருக்கின்றனரா என்று பரிசோதனை மேற்கொண்டனர்.
விழுப்புரம்: கெடாரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 3,000 கோழிகள் உயிரிழப்பு.
ஸ்ரீவில்லிபுத்தூர்: உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்துக்கு தேர் தயார் நிலையில் இருக்கிறது.
கேரள மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் முல்லைப்பெரியாறு ஆற்றில் நீர் வரத்து குறைந்தது.
விழுப்புரம்: மாம்பழப்பட்டு பகுதியில் விழுப்புரம் - திருக்கோவிலூர் இடையேயான பிரதான சாலையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வரும் இடத்தில் உள்ள மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தென்காசி: இதமான சாரலுடன் குற்றாலம் மெயின் அருவியில் போலீஸார் பாதுக்காப்புடன் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்.
தென்காசி: பழைய குற்றால அருவியில் அலை மோதிய சுற்றுலாப் பயணிகள், உற்சாக குளியலில் போட்டனர்.
கன்னியாகுமரி: கொட்டில்பாடு மீனவ கிராமத்தின் கடற்கரையில் ஏற்பட்டிருக்கும் கடல் அரிப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரி்ல் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
சேலம்: மேட்டூரிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்: தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையைத் தட்டிக்கேட்ட ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினரைத் தாக்கியவர்கள்மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு: ஆசிரியர் காலனி, சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி பழங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
நாகர்கோவில்: மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் மேயரிடம் மனுக்கள் அளித்த மக்கள்.
தூத்துக்குடி: தென்திருப்பேரை பேரூராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டுக்காகரூ.8.41 கோடி மதிப்பீட்டில், அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின்கீழ் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்க்காக, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு: மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, தூக்கநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளிப்பட்டியில் செயல்படும் கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி: மத்திய அரசின் SMAM திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விவசாய இயந்திரங்கள் வாங்கும் ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி: மாநிலத்தில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது.
source
https://www.vikatan.com/government-and-politics/politics/important-happenings-around-tamilnadu-vikatan-news-in-photos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக