விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் 20 வயதே ஆன காரலஸ் அல்கரஸ் எனும் ஸ்பெயின் வீரர் அனுபவமிக்க நோவக் ஜோக்கோவிச்சை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார்.
பரபரப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டி 4 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு நீடித்திருந்தது. முதல் செட்டில் அல்கரஸ் ரொம்பவே மோசமாக தோற்றிருந்தார். 6-1 என அந்த செட்டை ஜோக்கோவிச் வென்றார். ஆனால், அடுத்த செட்டிலேயே அல்கரஸ் மீண்டு வந்தார். 7-6 என அல்கரஸ் அந்த செட்டை வென்றார். அதேவேகத்தில் அடுத்த செட்டையும் 6-1 என வென்றார். விடாப்பிடியாக ஆடிய ஜோக்கோவிச் நான்காவது செட்டை 6-3 என வென்றார். ஆட்டம் பரபரப்பான இறுதி செட்டுக்கு சென்றது. அதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 6-4 என்ற கணக்கில் அல்கரஸ் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
ஜோக்கோவிச் சில நாட்களுக்கு முன்புதான் ஆண்கள் டென்னிஸ் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனையை செய்திருந்தார். ஃபிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம் டென்னிஸ் உலகில் 23 கிராண்ட்ஸ்லாம்களை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் எனும் வரலாற்றை படைத்திருந்தார். அப்படி ஒரு சாதனையை செயதுவிட்டு அவர் களமிறங்கும் அடுத்த கிராண்ட்ஸ்லாம் தொடரிலேயே 20 வயது இளைஞரான அல்கரஸ் அவரை மொத்தமாக தோற்கடித்து புது சரித்திரம் எழுத தொடங்கியிருக்கிறார்.
'நீங்கள் செய்யும் செயல்களில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்னுடைய வாழ்நாள் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.' என அல்கரஸ் கூறியிருக்கிறார்.
'டென்னிஸ் உலகின் அடுத்த சூப்பர் ஸ்டாரின் வளர்ச்சியை கண் முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரோஜர் ஃபெடரரை பின் தொடர்ந்ததை போலவே அடுத்த 10-12 வருடங்களுக்கு அல்கரஸை பின்தொடரப் போகிறேன்.' என்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
ஒரு நாயகன் உதயமாகிறான்!
source https://sports.vikatan.com/tennis/wimbledon-final-alcaraz-won-the-title
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக