Ad

வெள்ளி, 8 ஜூலை, 2022

``தேசிய கல்விக் கொள்கை சம்ஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகளை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது!" - மோடி

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை நேற்று தொடங்கிவைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், ``தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடு, கல்வியை குறுகிய சிந்தனையிலிருந்து விடுவித்து, 21-ம் நூற்றாண்டின் நவீன சிந்தனைகளுடன் இணைப்பதாகும். பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது. இந்திய கல்வி முறை, பட்டம் பெற்ற இளைஞர்களை உருவாக்குவதாக மட்டும் இருக்கக் கூடாது. பணியாளர் வர்க்கத்தை உருவாக்கிய ஆங்கிலேயர் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை.

மோடி

தேசிய கல்விக் கொள்கை, தாய்மொழிக் கல்விக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, சம்ஸ்கிருதம் போன்ற தொன்மையான இந்திய மொழிகளும் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. புதிய கல்விப் புரட்சியை ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வெகுவிரைவில் உலகின் கல்வி மையமாக இந்தியா உருவெடுக்கும். நமது இளைஞர்கள் திறமையானவர்களாகவும், தன்னம்பிக்கையுடனும், நடைமுறையை கணக்கிடக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான களத்தை புதிய கல்விக் கொள்கை தயார் செய்கிறது'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/national-education-policy-is-now-opening-the-way-for-studies-in-the-mother-tongue-says-modi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக