காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கடந்த ஜூலை 27-ம் தேதி செய்தியாளரிடம் பேசும்போது, ``இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பவர் அனைவருக்குமானவர். அவர் இந்தியாவின் `ராஷ்டிரபத்னி' ஆவார்'' என்றிருந்தார் ஆதிர் ரஞ்சன். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பலரும், ``இந்தியாவின் குடியரசுத் தலைவரை வேண்டுமென்றே ஆதிர் ரஞ்சன் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ராசன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதினார். அதில், "நான் பேசியது தெரியாமல் வாய் தவறி வந்த வார்த்தை. அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி நேற்று குடியரசுத் தலைவரின் கண்ணியத்தைக் குறைத்ததற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், "திருமதி. ஸ்மிருதி இரானி, மாண்புமிகு ஜனாதிபதியின் பெயரை, மாண்புமிகு ஜனாதிபதியின் அந்தஸ்து மற்றும் பதவிக்கு மரியாதையளிக்காமல் பயன்படுத்தியது சரியானதல்ல. ஜனாதிபதியின் பெயரை மாண்புமிகு ஜனாதிபதி அல்லது மேடம் அல்லது திருமதி என்ற முன்னொட்டு இல்லாமல் 'திரௌபதி முர்மு' என்று மீண்டும் மீண்டும் அவையில் கத்திக் கொண்டிருந்தார். மாண்புமிகு குடியரசுத் தலைவரின் பெயருக்கு முன் கண்ணியத்துக்குறியை வார்த்தைகளைப் பயன்படுத்தாத ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/adhir-ranjan-demands-apology-from-smriti-irani-for-yelling-droupadi-murmu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக