Ad

திங்கள், 18 ஜூலை, 2022

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 43 - பரிசு ரூ.5,000

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப்போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘`மூடநம்பிக்கை' - உங்கள் அல்லது அக்கம்பக்கத்தாரின் அனுபவம்...’ குறித்து ‘நச்’சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

புதிர்ப்போட்டி

கீழே 16 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 16 சிறிய சதுரங்களில் கேள்விகளுக்கான விடைகளை எழுதவும்.

I

1. இந்தக் காய்க்கு பூ அழகு (3)

2. நீர்ச்சத்துமிக்க காய். தரை மீது காய்க்கும் (3)

3. பாம்பு போல தொங்கும் காய் (3)

4. இந்த மூன்று காய்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

II

1. இந்தப் பழம் ஊறுகாய்க்கு பிரபலம் (5)

2. இந்தப் பழச்சாறு உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு நல்லது (6)

3. இந்தப் பழத்தை அப்படியே சாப்பிடலாம்; ஜூஸாகவும் குடிக்கலாம் (4)

4. இந்த மூன்று பழங்களுக்கும் உள்ள ஒற்றுமை?

III

1. வேகமாக ஓடும் பறவை (7)

2. ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவை (2)

3. இந்த நியூசிலாந்து பறவையின் பெயரில் ஒரு பழமும் உண்டு (2)

4. இந்த மூன்று பறவைகளுக்கும் உள்ள ஒற்றுமை?

IV

1. கிர் காடுகளில் வாழும் (4)

2. இந்தியாவின் தேசிய விலங்கு (2)

3. உடல் முழுவதும் புள்ளிகள் இருக்கும், வேகமாக ஓடக் கூடிய விலங்கு (4)

4. இந்த மூன்று விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமை?

சரியான விடையுடன்... பக்கத்து வீட்டு வாழை, தென்னை போன்றவை, உங்கள் வீட்டுப் பக்கம் வளர்ந்து நிற்கும் போது வரும் பிரச்னைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...

1. ஆ.வளர்மதி, தஞ்சாவூர்: நமக்கு ஆபத்து என்றால் உடனே வருவது பக்கத்து வீட்டுக்காரர்கள்தான். அற்ப விஷயங்களுக்காக அடுத்த வீட்டுக்காரர்களைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். சுமுகமாய் பேசி பிரச்னையைத் தீர்ப்பேன்.

2. ஆர்.சுப்புலட்சுமி, சென்னை-91: எங்கள் வீட்டை வாங்கியபோது தென்னை, பலா, பாதாம், தேக்கு மரங்கள் இருந்தன. பக்கத்து வீட்டுக்காரர்கள் குப்பை சேர்கிறது என்றார்கள். ‘உங்கள் வீட்டுப்பக்கம் காய்க்கும் காய்களை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்ன பிறகு, ‘இலை விழுந்தால் என்னம்மா... நானே பெருக்கிக் கொளுத்திவிடுகிறேன். கொசுத்தொல்லை இருக்காது’ என்றார்களே பார்க்கலாம்.

3. பி.கீதா, சேலம்-15: பக்கத்து வீட்டு வாழை, தென்னை கூட பரவாயில்லை. ஆனால், வேப்ப மரம் மூலம் விழும் இலை, சருகுகளை அன்றாடம் கூட்டி அள்ளுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், அதை ஓர் உடற்பயிற்சியாக நினைத்து குனிந்து, நிமிர்ந்து கூட்டியதன் பலனாக என் தொப்பை குறைந்தது. கொஞ்சம் ‘மாத்தி யோசி’த்ததன் மூலம் தவறாமல் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. ஜி.மகாலெட்சுமி, தூத்துக்குடி: ஒவ்வொரு முறையும் தேங்காய் பறிக்கும்போது இரண்டு, மூன்று தேங்காய்களைப் பக்கத்து வீட்டிலிருப்பவர்களுக்கும் கொடுத்துவிடுவதால் காய்ந்த தென்னை மட்டைகள் அவர்கள் காம்பவுண்டுக்குள் விழும்போது, அவர்கள் எதுவும் சொல்வதில்லை.

5. சங்கரி வெங்கட், சென்னை-63: பக்கத்து வீட்டு தென்னை ஓலை மின் வழித்தட கம்பி மேல் படுவதால் அடிக்கடி மின்சாரத்தடை ஏற்படுவதுடன், உயர் மின் அழுத்தம் காரணமாக மின் உபகரணங்கள் பழுதடைகின்றன. தவிர எங்கள் வீட்டில் நிறுத்தியிருந்த காரின் மீது தேங்காய் விழுந்து சேதம் ஏற்பட்டது. அதனால் அடிக்கடி விழும்நிலையில் உள்ள ஓலை, தேங்காய்களை எடுத்துவிடச் சொல்கிறேன்.

6. கோ.மஞ்சரி கோபி, கிருஷ்ணகிரி: பிரச்னை என்று நினைத்தால் எல்லாமே பிரச்னைதான். அடுத்தடுத்த வீடுகளில் இருக்கிறோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க வேண்டும் என முடிவு செய்து அண்டை வீட்டு மரங்களையும், நம் வீட்டு மரங்களாக நேசித்துப் பழகினால் எந்தப் பிரச்னை யும் இல்லை. மரங்களைப் போல் உறவும் செழித்து வளரும்.

7. ஷாலினி ஜெரால்டு, சென்னை-92: பக்கத்து வீட்டிலிருந்த இரண்டு தென்னை மரங்களில் ஒன்று தானாகவே பட்டுப் போய்விட்டது. மற்ற மரம் எங்கள் வீட்டுப் பக்கமே சாய்ந் திருந்ததால், காய்ந்த மட்டை, தேங்காய்கள் திடீர் திடீரென்று விழுந்துகொண்டேயிருக்கும். யார் தலையிலாவது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அடுத்த வீட்டாரிடம் சொல்லிப் பார்த்தும் அவர்களுக்கு மரத்தை வெட்ட மனமில்லை. எங்களுடன் நன்கு பழகுபவர்கள் என்பதால் கடிந்து கூறவும் இயலவில்லை. திடீரென ஒருநாள் அந்த மரத்தை வெட்டி விட்டனர். ‘ஒற்றைத் தென்னை வீட்டுக்கு நல்லதல்ல’ என்று அவர்களின் உறவினர்கள் கூறியதுதான் காரணம் எனத் தெரிந்துகொண்டோம். எங்களின் பொறுமையான அணுகு முறையால் அவர்களுடன் எங்கள் நட்பு இன்றும் தொடர் கிறது.

8. எ.சுகுணா, சேலம்-3: நம் வீட்டுப் பக்கம் வளர்ந்தால் அது நமக்குச் சொந்தமானது. ‘உங்க வீட்டு மர இளநீர் ரொம்ப டேஸ்ட். அமாவாசை அன்று சாமி கும்பிட வாழையிலை ரொம்பவே பயன்பட்டது’ என்று நாசுக்காகத் தெரிவிப்பேன். நம் வழி எப்போதும் தனி வழிதான். அதுதான் அகிம்சை வழி.

9. ஏ.யோகப்பிரியா, சென்னை-106: பக்கத்து வீட்டு வாழை எங்கள் வீட்டுப்பக்கம் குலை தள்ளினாலும், தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்தாலும் அவர்களிடம் கொடுத்துவிடுவோம். சில நேரம் அவர்கள், ‘நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கொடுத்துவிடுவார்கள். வீட்டுக்கு விருந்தினர் வந்தால், அவர்களிடம் கூறிவிட்டு வாழையிலையை எடுத்துக்கொள்வோம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.

10. ஜி.பரமேஸ்வரி, தூத்துக்குடி: ‘தென்னை மட்டை களைப் பறிச்சு நாங்களா உங்க வீட்டுக்குள்ள போடுறோம்’ என்ற நக்கலான பதிலால் அடுத்த வீட்டுக்காரரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டோம். இப்போது தேங்காய் விழ ஆரம்பித்து இருக்கிறது. திங்கவும் முடியாமல், திருப்பிக் கொடுக்கவும் முடியாமல் தவிக்கிறோம்.



source https://www.vikatan.com/news/general-news/puthir-potti-43

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக