Ad

வெள்ளி, 8 ஜூலை, 2022

தீவிரமடையும் கொடநாடு வழக்கு விசாரணை; போலீஸ் வளையத்தில் தொழிலதிபர்... அடுத்து என்ன?!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான கூடுதல் விசாரணை நடைபெற்றுவருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் முடியும் தறுவாயிலிருந்த வழக்கை, தி.மு.க ஆட்சியில் தூசுதட்டி எடுத்து விசாரித்துவருகின்றனர்.

சசிகலா

அந்த வகையில் சசிகலா, விவேக் ஜெயராமன் உட்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வாரம் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கண்ணனிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தொழிலதிபர் செந்தில் என்பவரிடம் இரண்டாவது நாளாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் மணல் ஒப்பந்ததாரராகக் கொடிகட்டிப் பறந்தவர் கோவையைச் சேர்ந்த ஓ.ஆறுமுகசாமி.

மகன் செந்தில் குமாருடன் ஆறுமுகசாமி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டில் ஆறுமுகசாமியும் சிக்கியிருந்தார். அந்த அளவுக்கு கார்டனுடன் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர் அவர். இதன் காரணமாக அவரிடம் இரண்டாவது நாளாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆறுமுகசாமி தரப்பு கொடநாடு எஸ்டேட் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. கொடநாடு எஸ்டேட் தொடர்பான முக்கிய ஆவணம் ஒன்று ஆறுமுகசாமி தரப்பிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொடநாடு வழக்கு விசாரணை

அது குறித்துத்தான் ஆறுமுகசாமியின் மகனும், செந்தில் பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர் என்கிறார்கள். தொடர்ந்து விசாரணை தீவிரமடைவதால், கொடநாடு வழக்கு தொடர்பாக ஒருவர் விரைவில் கைதுசெய்யப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/police-officials-tightening-kodanad-case-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக