Ad

ஞாயிறு, 10 ஜூலை, 2022

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார்... காரணம் என்ன?!

ஆந்திராவில் தற்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அவர் ஆந்திராவில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் மனதில் தனக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். மேலும் இவரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா `ஒய்எஸ்ஆர் தெலங்கானா' என்ற பெயரில் ஒரு கட்சி நடத்திவருகிறார். இவருடைய கட்சி தெலங்கானாவில் செயல்பட்டுவருகிறது. இவர்களுக்கிடையே கருத்து மோதல் இருப்பதாகக் கூறப்பட்டுவருகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி

இந்த நிலையில் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் கௌரவத் தலைவர் விஜயலட்சுமி, ``எனது கணவர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி தெலங்கானா பிராந்திய மக்கள் குறித்து கண்ட கனவை நினைவாக்குவதற்காக என்னுடைய மகள் உழைத்துவருகிறார். இந்த நேரத்தில் நான் என்னுடைய மகளின் பக்கம் நிற்பதுதான் சரி என நினைக்கிறேன்.

ஆந்திராவில் என் மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல்வர் ஆவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஜெகன்மோகனுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிடைத்துவிடவில்லை. அவர் மிகவும் போராடித்தான் வெற்றி பெற்றார். இதனால் ஓஎஸ்ஆர் காங்கிரஸின் கௌரவத் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன்'' என்றார். இதனால், மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இது முன்னரே பேசி எடுக்கப்பட்ட முடிவுதான் என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ys-jagan-mohan-reddys-mother-quits-ysrcp-to-stand-by-her-daughter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக