Ad

ஞாயிறு, 10 ஜூலை, 2022

இலங்கை: அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்... அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோட்டம்?!

இலங்கையில் பல மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டேவருகிறது. இந்த நிலைமை மிகவும் மோசமடைந்ததையொட்டி, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமாகப் பதவியேற்றார்.

இலங்கையில் கடும் எரிபொருள் பற்றாக்குறை, உணவுப்பொருள்களின் விலை உயர்வு, மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை மக்கள் சந்தித்துவருகின்றனர். ஆனால் இன்னும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி சரியாகவில்லை. இதன் காரணமாக, இலங்கை கொழும்பில் ஆளுங்கட்சிக்கு எதிராக, எதிர்க்கட்சியினர், மாணவர் அமைப்பினர், தொழிற்சங்க அமைப்புகள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இலங்கை

இந்த நிலையில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்குத் தடைகளையும் தாண்டி ஏராளமான போராட்டகாரர்கள் குவிந்தனர். பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டும். அதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரபூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களைக் கலைக்கும் வகையில் காவல்துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே மாளிகையைவிட்டுத் தப்பியிருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்து வெளியிட்டுவருகின்றன.

இலங்கையில் போராட்டம் தீவிரமடையும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையொட்டி, கோத்தபய ராஜபக்சே தப்பியிருப்பதாகவும், அவர் நேற்று இரவே ராணுவத் தலைமையகத்துகுச் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sri-lanka-president-gotabaya-rajapaksa-flees-as-protesters-surround-residence

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக