Ad

ஞாயிறு, 31 ஜூலை, 2022

Morning Motivation: ஒரு சிகரத்தை அடைபவர் என்ன செய்வார்? நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபவம்!

`எல்லா வெற்றிகளுக்கும் பின்னாலிருக்கும் ரகசியம் ஒன்றே ஒன்றுதான், விடாமுயற்சி.’ - பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ.

படப்பிடிப்புக்காக ஒரு ஃபேக்டரிக்குப் போயிருந்தார் நடிகர் மம்முட்டி. ஷெட்டில் இரண்டு புத்தம் புதிய கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததுமே மம்முட்டியின் மனதில் லேசான பொறாமை கலந்த எரிச்சல் பொங்கி எழுந்தது. `யார்றா அவன்... ரெண்டு ஃபாரின் காரோட அலையறவன்?’ என்ற தலைக்கனம் எட்டிப் பார்த்தது. அவர் தன் காரிலிருந்து இறங்கியதும், புரொடக்‌ஷன் ஆட்களும், நிறுவனப் பணியாளர்களும் அவரருகே வந்தார்கள்.

``வாங்க சார்... எம்.டி-யோட ரூம்ல போய் உட்காரலாம்.’’ பணியாட்களில் ஒருவர் சொன்னார்.

``வேணாம். நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன்.’’

``இல்லை சார். எம்.டி-யும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்.’’

சட்டெனப் பொங்கி வந்த எரிச்சலை மறைத்தபடி மம்முட்டி சொன்னார்... ``பார்க்கலாமே.’’

நடிகர் மம்முட்டி சந்திப்பு

`எம்.டி-யிடம் காசிருந்தா அது அவனுக்கு. எனக்கென்ன...’ சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மம்முட்டி பொறாமைப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. `எவ்வளவு பெரிய ஃபேக்டரி முதலாளியாவும் இருக்கட்டுமே... அவரோட இடத்துக்குக் கூப்பிடாம, இறங்கி வந்தா என்னவாம்... கோடிக்கணக்கான ரசிகர்களைக்கொண்டிருக்கும் மம்முட்டியைத்தான் தன் இடத்துக்குக் கூப்பிடுறார்ங்கிறது அவருக்குப் புரியலையா?’ என்றும் அவருக்குத் தோன்றியது.

அவர் போன சிறிது நேரத்துக்குப் பிறகு ஃபேக்டரி எம்.டி மாடியிலிருந்து இறங்கி வந்தார். கதரில் வெள்ளையுடை அணிந்த மிகவும் குண்டான மனிதர்.

``என்னடா... நான் கூப்பிட்டா வர மாட்டியா?’’

அப்படி அவர் சொன்னதும் மம்முட்டிக்குக் கோபம் உடல் முழுக்கப் பரவி, தலைக்கேறி, கண்கள் சிவந்தன. `இவன் யார் என்னை வாடா போடான்னு பேச...’

``நீ பெரிய சினிமா நடிகன்தான். எனக்கும் தெரியும், ரொம்ப யோசிக்காம இங்கே வாடா.’’

மம்முட்டி எழுந்துகொண்டார். ``அப்புறம் வர்றேன்.’’ உரத்த குரலில் சொன்னார்.

``இவ்ளோ கௌரவத்தோட இருக்காத. நான் யார்னு உனக்குத் தெரியலைதானே?’’

அந்தக் கேள்வியில் இழையோடிய அடக்கத்தையும் பிரியத்தையும் மம்முட்டி ஒருசேரக் கண்டுபிடித்துவிட்டார்.

``நான் பழைய குஞ்ஞுப்புடா.’’

நடிகர் மம்முட்டி!

மம்முட்டியின் மனதில் ஃப்ளாஷ் பேக்போல இருபத்தைந்து வருடங்கள் பின்னால் ஓடின. அவருடைய சொந்தக்காரரின் வீட்டு வராந்தாவில் நோன்பு நாள்களில் கண்களில் பசியையும் ஆவலையும் தேக்கிவைத்து, கஞ்சி வாங்க பாத்திரத்தோடு காத்திருந்த பையனின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பையன்தான் அந்த எம்.டி என்பது புரிந்தது.நோன்பு நாள்களில் மம்முட்டி அவருடைய உறவினர் வீட்டுக்குப் போவார். ஆனால், மசூதியில் வைத்துத்தான் அந்தச் சிறுவனை அவர் முதன்முதலாகப் பார்த்திருந்தார். மசூதியில் கடைசித் தொழுகையின்போது அவன் எப்போதுமிருப்பான். மம்முட்டியிடம் அன்போடும் மரியாதையோடும் பேசுவான். அப்போதெல்லாம் மம்முட்டி, பெரிய வீட்டுப்பையன் என்கிற கர்வத்தோடு அலைந்துகொண்டிருந்தார். `வீட்டு வாசலில் நோன்புக் கஞ்சிக்காகப் பாத்திரத்துடன் காத்திருக்கிற அந்தக் கூட்டத்தை மிகுந்த அலட்சியத்தோடும், புறந்தள்ளின பார்வையோடும் பார்த்துவிட்டு உள்ளே போவேன்’ என்று மம்முட்டியே குறிப்பிடுகிறார்.

கண்களில் பசியையும் ஆவலையும் தேக்கிவைத்திருந்த அந்தச் சிறுவன் இப்போது, அவர் முன்னால் விஸ்வரூபமெடுத்து நிற்கிறான். மம்முட்டியும் அந்த எம்.டி-யும் அமர்ந்தார்கள். அந்த மனிதர், தான் பட்ட கஷ்டங்களையும், அவருடைய வளர்ச்சியையும், கடவுள் அவர்மீது காட்டிய கருணையையும் மம்முட்டியிடம் பகிர்ந்துகொண்டார். இப்போது அவரிடம் இதுபோல ஐந்து ஃபேக்டரிகள் இருக்கின்றன; அவருடைய தம்பிகளும் சில நிறுவனங்களைப் பார்த்துக்கொள்கிறார்கள்; சகோதரிகளைப் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்; கற்பனைக்கும் எட்ட முடியாத அளவுக்குத் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்; பலமுறை உலக நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார்... என்பதையெல்லாம் சொன்னார்.

அவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், அல்சர் போன்ற வியாதிகள் இருப்பதால், அவரால் விரும்பியதைச் சாப்பிட முடியவில்லையாம். டாக்டர்கள் அறிவுறுத்தும் காய்களும், ஒருபிடிச் சோறுமாக வாழ்க்கை போகிறது. அன்று ஒரு வாய் கஞ்சிக்காகப் பல வீட்டு வாசல்களை ஏறி இறங்கிய சிறுவன், இன்று நினைத்ததெல்லாம் கிடைக்கிற வாழ்விலும் பட்டினி கிடக்கிறான். அந்தச் சிறுவன் இப்படி வளர்ந்து நிற்பதற்கு எடுத்துக்கொண்ட காலம் மிகக் குறைவானதே என்பது ஆச்சர்யம்.

மம்முட்டி

`ஒவ்வொரு கஷ்டத்தையும் மன உறுதி கொண்டு மட்டுமே கடந்து சென்ற குஞ்ஞுப்பு, உண்மையில் வாழ்க்கையோடு மல்லுக்கட்டி நின்றிருக்கிறார். இளமையில் பட்ட கஷ்டங்களையும் நொம்பலங்களையும் சமாளித்து வாழ்வின் வளர்ச்சியால் அதை ஈடுகட்டியிருக்கிறார். அவருடைய லட்சிய தாகம், ஒருபோதும் மாத சம்பளக்காரனாகவோ, ஒரு சொந்த வீட்டைக் கட்டிப் பார்த்துவிட வேண்டும் என்பதிலோ அடங்குவதாய் இல்லை. நினைத்த ஒவ்வொரு விஷயத்தையும் சாதிக்கும்போதும் குஞ்ஞுப்பு தன் அடுத்த லட்சியத்தைக் கூடுதல் உயரத்துக்குத் தூக்கிவைத்தார். பிறகு பின்னாலேயே நூல் பிடித்துப்போய் அதைத் தன்வயப்படுத்தினார். மலை ஏறி உச்சியைத் தொட நினைக்கும் ஒருவன், எப்படி ஒவ்வொரு சிகரத்தை அடையும்போதும் `அடுத்த சிகரத்துக்குப் போகக்கூடிய மன, உடல் தைரியத்தை எனக்குக் கொடு’ என்று பிரார்த்தனை செய்வானோ, அந்த மனநிலையில் குஞ்ஞுப்பு இருந்ததாக எனக்குத் தோன்றியது’ என்று குறிப்பிடுகிறார் மம்முட்டி.

`மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள்’ என்ற நூலில் மம்முட்டி இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். வம்சி வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் கே.வி.ஷைலஜா. திருவள்ளுவர், `முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்கிறார். மம்முட்டியின் நண்பர் குஞ்ஞுப்பு உயரங்களைத் தொட்டதற்கு முக்கியக் காரணம் அந்த விடாமுயற்சிதான்!



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/life-story-of-actor-mammootty

``ஜனாதிபதியை கண்ணியக்குறைவாக பேசிய ஸ்மிருதி இரானி மன்னிப்பு கேட்க வேண்டும்" - ஆதிர் ரஞ்சன்

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, கடந்த ஜூலை 27-ம் தேதி செய்தியாளரிடம் பேசும்போது, ``இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பவர் அனைவருக்குமானவர். அவர் இந்தியாவின் `ராஷ்டிரபத்னி' ஆவார்'' என்றிருந்தார் ஆதிர் ரஞ்சன். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பலரும், ``இந்தியாவின் குடியரசுத் தலைவரை வேண்டுமென்றே ஆதிர் ரஞ்சன் அவமானப்படுத்திவிட்டார். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ராசன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதினார். அதில், "நான் பேசியது தெரியாமல் வாய் தவறி வந்த வார்த்தை. அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆதிர் ரஞ்சன் செளத்ரி

இந்த நிலையில், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி நேற்று குடியரசுத் தலைவரின் கண்ணியத்தைக் குறைத்ததற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், "திருமதி. ஸ்மிருதி இரானி, மாண்புமிகு ஜனாதிபதியின் பெயரை, மாண்புமிகு ஜனாதிபதியின் அந்தஸ்து மற்றும் பதவிக்கு மரியாதையளிக்காமல் பயன்படுத்தியது சரியானதல்ல. ஜனாதிபதியின் பெயரை மாண்புமிகு ஜனாதிபதி அல்லது மேடம் அல்லது திருமதி என்ற முன்னொட்டு இல்லாமல் 'திரௌபதி முர்மு' என்று மீண்டும் மீண்டும் அவையில் கத்திக் கொண்டிருந்தார். மாண்புமிகு குடியரசுத் தலைவரின் பெயருக்கு முன் கண்ணியத்துக்குறியை வார்த்தைகளைப் பயன்படுத்தாத ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/adhir-ranjan-demands-apology-from-smriti-irani-for-yelling-droupadi-murmu

Doctor Vikatan: குழந்தைக்கு கட்டாயப்படுத்தி சாப்பாடு ஊட்டலாமா... பசியில் அழும்வரை காத்திருக்கலாமா?

குழந்தை பசியோடு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? தாய்ப்பாலோடு திட உணவையும் கொடுக்கும்போது, சிலநேரம் திட உணவை சாப்பிட மறுக்கிறது. குழந்தை பசியோடு உள்ளதா இல்லையா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. குழந்தை கேட்கட்டும் என உணவு கொடுக்காமல் காத்திருக்க வேண்டுமா அல்லது கட்டாயப்படுத்தி அதற்கு நேரத்துக்கு சாப்பாடு ஊட்ட வேண்டுமா?

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்...

பச்சிளம் குழந்தைகளால் மிகக் குறைந்த அளவுதான் உணவு எடுத்துக் கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே, குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.

அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளைக் கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம்.

Babies

பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில சமிக்ஞைகள், சத்தங்கள் மற்றும் அசைவுகளின் மூலம் உணர்த்தும். சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயைத் திறக்கும்.

உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளைக் காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையைக் காட்டும்.

வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயைத் திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையிலிருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.

feeding

திட உணவுகளைக் கொடுக்கத் தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்குப் பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதைத் தவிருங்கள். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு அந்த உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.

தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தையே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/food/healthy/doctor-vikatan-is-it-right-to-force-feed-a-child

அன்பு வணக்கம்!

பண்டிகைக் காலம் வருவதற்கு இன்னும் சற்று காலம் இருக்கிறது. ஆனால், கார்/பைக் ஏரியாவில் இப்போதே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாக கார்/பைக்ஸ் அறிமுகங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்ப்பியோN, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் டூஸான், ஆடி A8 L என பலதரப்பட்ட விலைகளில் பலதரப்பட்ட கார்கள் அறிமுகமாகியிருக்கின்றன. கார்களுக்குச் சற்றும் குறைவில்லாது டிவிஎஸ் ரோனின், பஜாஜ் பல்ஸர் N160, BMW S1000RR HP4 என 2 வீலர்களும் வரிசையாக அறிமுகமாகின.

இந்தக் கொண்டாட்டங்களோடு இன்னொரு கொண்டாட்டமும் நடந்தது. அது பள்ளி மாணவ - மாணவிகளுக்காக மோட்டார் விகடன் நடத்திய கார் டிசைனிங் பயிலரங்கம். நம் நாட்டில் கல்லூரிகளிலேயே, ஏன் பொறியியல் கல்லூரிகளில்கூட பயிற்றுவிக்கப்படாத Clay Modelling என்ற கலையைப் பள்ளி மாணவர்களுக்கு ஆயா டிசைன் அகாடமியின் தலைவரும், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவருமான க.சத்தியசீலன் தலைமையிலான வல்லுநர்கள் நடத்தினார்கள். இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளின் கைவண்ணத்தில் காகிதத்தில் பிறந்த கார், களிமண் சிற்பமாக இடம் மாறி உயிர் பெற்றதைப் பார்ப்பது என்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கலையின் மீதும் காரின் மீதும் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குத் தன்னால் இயன்ற அளவு மோட்டார் விகடன் நிச்சயம் தொடர்ந்து வழிகாட்டும்.

கார் டிசைன் மீது மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பற்றியும், அந்த ஆர்வத்தை எப்படி வளர்த்தெடுப்பது என்பது பற்றியும் மோட்டார் விகடனுக்கு இருக்கும் எண்ணங்களை ஆட்டோமோட்டிவ் துறையில் முன்னணியில் இருக்கும் ஜாம்பவான்களோடும் நிபுணர்களோடும் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பும் மோட்டார் விகடனுக்குக் கிடைத்தது. CII எனப்படும் இந்தியத் தொழில்துறையினரின் கூட்டமைப்பு நடத்திய Automotive Innovation Summit என்ற மாபெரும் சந்திப்பில், Future Trends in Automotive Design - Consumer Perspective என்ற பொருளில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடவும் கிடைத்த வாய்ப்பு அது.

பொறியியல் கல்லூரிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இடையே பாலம் அமைக்க மோட்டார் விகடன் முன்னெடுக்கும் முயற்சிகளை இந்த அமர்வில் பகிர்ந்து கொண்டபோது கிடைத்த பெரும் வரவேற்பு, உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

ஆசிரியர்



source https://www.vikatan.com/news/editorial/editor-page-9

கேட்ஜெட்ஸ்... எந்த போன் வாங்கலாம்?



source https://www.vikatan.com/technology/gadgets/gadgets-14

01.08.22 திங்கட்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | August - 1 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.

#இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/01082022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சனி, 30 ஜூலை, 2022

அதிகரிக்கும் எம்.பி-க்களின் இடைநீக்கம் - எதிர்க்கட்சிகளிடம் அஞ்சுகிறதா மோடி அரசு?!

நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலிருந்து, இரு அவைகளையும் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த இடைநீக்கத்தை ரத்துசெய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலர் 50 மணிநேர தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். வெயில், மழை, கொசுக்கடிகளையும் சகித்துக்கொண்டு ஜனநாயகப் போராட்டத்தை நடத்திவருவதாகவும், தங்கள் மீதான இடைநீக்க உத்தரவு ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும் போராடும் எம்.பி-க்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

காந்திசிலை முன்பு போராட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கியது. ஆனால், விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜி.எஸ்.டி., எதிர்க்கட்சிகள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

அந்த நிலையில், ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்டோர் காஸ் விலை உயர்வு குறித்த போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, `நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடாமல், சபையின் விதிமுறைகளை மீறி, இடையூறு விளைவித்ததற்காக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு எம்.பி-க்களையும், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கக் கூடாது' எனக் கூறி இடைநீக்கம் செய்தார்.

காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் டி.என்.பிரதாபன்

அந்த நிலையில், ஜூலை 27-ம் தேதி கூட்டத்தில் மீண்டும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டதால், தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ்., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள்

அதைத் தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதியும் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் இடைநீக்கம்... குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு, விலைவாசி உயர்வு போன்றவை குறித்து விவாதம நடத்த வேண்டும் எனக் கோரி அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சி எம்.பி-க்கள் சுஷில்குமார் குப்தா, சந்தீப்குமார் பதக் மற்றும் சுயேச்சை எம்.பி அஜித்குமார் புயான் உள்ளிட்ட மூன்று பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுவரை மாநிலங்களவையில் 23, மக்களவையில் 4 என மொத்தம் 27 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த இடைநீக்கத்தை எதிர்த்தும், ரத்துசெய்யக் கோரியும் திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் 50 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

போராட்டத்தில் எம்.பி-க்கள்

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் நடைபெற்றுவரும் எம்.பி-க்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தி.மு.க எம்.பி-க்கள், 'ஜனநாயகப் படுகொலை' என்ற வாசகம் அடங்கிய கறுப்பு முகக்கவசத்தை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் (Derek O'Brien), ``இந்த அரசு ஜனநாயகத்தை இடைநீக்கம் செய்துள்ளது" என்றிருக்கிறார். மேலும், ``இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. ஆனால் நாங்கள் அரசுக்கு ஒன்றைக் கூறுகிறோம். நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேச முடியவில்லை. இதற்காக அரசுதான் மன்னிப்புக் கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசுகின்றன" எனத் தெரிவித்திருக்கிறார்.

போராட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள்

தொடர்ந்து திரிணாமுல் காங். எம்.பி-யான சுஸ்மிதா தேவ், ``பணவீக்கத்துக்கு மோடி அரசிடம் பதிலில்லை. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக எங்களை இடைநீக்கம் செய்தது நியாயமற்றது. நாங்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவோம்" என்றிருக்கிறார். மற்றொரு எம்.பி டோலா சென் (Dola Sen), ``போராட்டம் நடத்திவருபவர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு கூடாரம் அமைத்து தர எழுத்துபூர்வமாக கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ``எதிர்க்கட்சிகளைப் பார்த்து பிரதமர் மோடியும், பா.ஜ.க அமைச்சர்களும் அஞ்சுகிறார்கள்; நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஓடி ஒளிகிறார்கள்" என விமர்சித்திருக்கிறார்.

கொசுக்கடியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்

இரவு, பகலாக போராடிவரும் சஸ்பெண்ட் எம்.பி-க்கள் கடுமையான கொசுக்கடியிலும், மழை, வெயிலிலும் சிரமப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு கொசு விரட்டிகூட கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும், ஆளுங்கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடக்கும் பகுதியை தவிர்த்துவிட்டு வேறுவழியில் வெளியேறுகிறார்கள் என்றும், தங்கள்மீதான இடைநீக்க நடவடிக்கை ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும் கூறியிருக்கின்றனர்.

பாஜக தரப்பிலோ, `எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விரும்பவில்லை. அமளி செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். தொடக்கத்தில், அமளியின்போது கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. எனினும், அவை மரியாதைக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படும்போது, அவைத்தலைவர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிறார். இதில் பாஜக ரோல் எதுவும் இல்லை’ என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/parliament-monsoon-session-27-opposition-mps-suspended-protest

ஜோதி விமர்சனம்: சீரியல் கில்லர் படங்கள் தெரியும்... ஆனால் இது `சீரியல்' த்ரில்லர் படம்!

மோசமான கருத்தை நல்ல மேக்கிங்கில் சொல்லும் படங்கள் சில. நல்ல கருத்தை மோசமான மேக்கிங்கில் சொல்லும் படங்கள் சில. இதில் `ஜோதி' இரண்டாவது வகை.

நிறைமாத கர்ப்பிணியான ஷீலா ராஜ்குமார் வீட்டில் தனித்திருக்கும்போது ஒரு மர்ம நபரால் தாக்கப்படுகிறார். சத்தம் கேட்டு பக்கத்துவீட்டில் வசிக்கும் க்ரிஷா குரூப் வந்து பார்க்கும்போது ஷீலா ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவருக்கு அவசர அவசரமாக சிசேரியன் செய்யப்பட்டு பச்சிளம் குழந்தையைக் குழந்தையைக் கடத்தியிருப்பது தெரிய வருகிறது. உடனே க்ரிஷா தன் கணவரான ஹீரோ வெற்றிக்கு போன் செய்ய, எஸ்.ஐயான வெற்றி இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார். விறுவிறுப்பாய் இப்படித் தொடங்கும் கதை மேலும் மேலும் பதற்றத்திற்குள்ளாக்கும் என நீங்கள் நினைத்தால்... வீ ஆர் ஸாரி. ப்ரைம் டைமில் வெளியாகும் சீரியல் போல அநாவசியமான காட்சிகள், உணர்ச்சிகளே கடத்தப்படாத சென்டிமென்ட் என எங்கெங்கோ சுற்றி முடிகிறது கதை.

ஜோதி விமர்சனம்

ஹீரோவாய் வெற்றி. இறுக்கமான காட்சியமைப்புகளில் அவரின் முக உணர்ச்சிகள் செட்டாகின்றன. ஆனால் படம் முழுக்க கொஞ்சமும் வெரைட்டி காட்டாமல் அப்படியே வருவது ஏனோ? இன்னொருபுறம் இவருக்குப் போட்டியாகக் குழந்தையைத் தொலைத்த தந்தையான 'ராட்சஷன்' சரவணனும், 'எனக்கு இவ்வளவுதான் வரும்' என்கிற மோடிலேயே நடுநடுவே வந்து போகிறார். 'அவங்க இல்லனா என்ன, நான் பண்றேன் பாருங்க' என ஷீலா ராஜ்குமார் மூவருக்குமாய் சேர்த்து மிகை நடிப்பில் பொங்கித் தள்ள நம்மால் ஒரு இடத்தில் கூட படத்தோடு ஒன்றிப் போக முடியவில்லை.

மைம் கோபி ஒருவர் மட்டுமே தன் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாய்ச் செய்துவிட்டுப் போகிறார். இன்னபிற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மற்றவர்கள் மெயின் கேரக்டர்களில் நடித்திருப்பவர்களுக்கு `போட்டியாக' திறனை வெளிக்காட்ட, படம் தள்ளாடுகிறது.

சமூக அவலத்தைப் படமாய் எடுக்கவேண்டும் என இயக்குநர் நினைத்தது சரிதான். ஆனால் சமூகப் பொறுப்போடு சேர்த்து கொஞ்சம் கதை மீதான பொறுப்பையும் ஏற்றிருக்கலாம். துண்டாடப்பட்ட திரைக்கதை நம்மை ரொம்பவே சோதிக்கிறது. காவல்துறை விசாரிக்க விசாரிக்கப் புதிது புதிதாய் கேரக்டர்கள் க்ளைமாக்ஸ் வரை அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிளைக்கதைகள் வேறு. ஆனால் மில்லிகிராம் அளவிலான விறுவிறுப்பு கூட எதிலும் இல்லை. 'அதிக பிளாஷ்பேக்குகள் கொண்ட தமிழ்ப்படம்' எனக் கணக்கெடுத்து பட்டம் கொடுக்குமளவிற்கான திரைக்கதை. நல்லவேளையாகக் கடத்தப்பட்ட குழந்தை பிறந்து ஒருநாளே ஆகியிருப்பதால் அதற்கு மட்டும் பிளாஷ்பேக்கிற்கான வெளி இல்லை.

ஜோதி விமர்சனம்

வழக்கமாய் நடிகர்கள் சொதப்பும்போது தொழில்நுட்ப குழுவின் உழைப்பு படத்தை ஓரளவிற்குத் தாங்கி நிற்கும். ஆனால் இந்தப் படத்தில் அவர்களும் தங்கள் பங்கிற்குச் சோதிக்கிறார்கள். முக்கியமாய் ஹர்ஷவர்தன் பரமேஸ்வரின் இசை. பாடல்கள் எல்லாமே எளிதில் மறந்துவிடக்கூடிய ரகம். அதனால்தானோ என்னமோ தன் பெயரை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காகப் பின்னணி இசையில் முத்திரையை 'அழுத்த்த்த்தமாக' பதித்திருக்கிறார். இரைச்சலையும் தாண்டிய மீட்டரில் பின்னணி இசை இரண்டு மணிநேரங்கள் ஒலிக்க, படம் முடிந்து வெளியே வந்தபின்னரும் இரவெல்லாம் அது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

செசிஜயாவின் ஒளிப்பதிவு ஓகே ரகம். அத்தனை கிளைக்கதைகளையும் அயர்ச்சியே இல்லாமல் கோத்து நம்மை அயர்ச்சிக்குள்ளாக்குகிறது சத்யமூர்த்தியின் படத்தொகுப்பு.

ஜோதி விமர்சனம்

இறுதியாய் வரும் ட்விஸ்ட் நிஜமாகவே ட்விஸ்ட்தான். ஆனால் அது பதிவு செய்யப்பட்ட விதத்தில் அநியாயத்திற்கு நாடகத்தன்மை. குற்றவாளி யார் எனத் தெரிந்தபின்பு பழக்க தோஷத்தில் மறுபடியும் ஒரு பிளாஷ்பேக், எண்ட் க்ரெடிட் என முடியவிடாமல் இழுத்தடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பழங்கால பாணியில் சாமி சிலையின் முன் உக்கிரமாக ஆடி கோபத்தைக் கொட்டித் தீர்க்கிறார் நாயகி. அது படமாக்கப்பட்ட விதத்தில் மிகை நடிப்பும், செயற்கைத்தனமும் போட்டிப் போடுகின்றன.

சீரியல் கில்லர் படங்களைப் போல `சீரியல்' த்ரில்லர் படம் இந்த `ஜோதி'.


source https://cinema.vikatan.com/movie-review/jothi-is-a-mediocre-crime-thriller-with-shades-of-a-tv-serial

பஞ்சாங்கக் குறிப்புகள் - ஆகஸ்ட் 1 முதல் 7 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்


source https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-details-for-the-period-of-august-1st-to-7th

உணவு, மருத்துவம் அயல் நாட்டவர்கள் காப்புரிமையை அபகரிக்கும் நிலை... முறையாக செய்ய வேண்டியது என்ன?

ஒரு நாட்டின் தொன்மைக்கும் அந்த நாட்டு மக்கள் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டு. உணவுகளின் வகைகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று சலைத்ததில்லை. சீனாவிலும் உணவுகளின் வகைகள் ஏராளம். இது மாதிரி நிறைய உணவுவகைகளைக் கொண்ட நாடுகள் வேறு இல்லை எனலாம். மேலும் இந்தியாவும் சீனாவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடுகள்.

சீனா

இந்தியாவைப் பொருத்தமட்டில் உணவுப்பழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. ஏன்? உணவு வகைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது என்றால் மிகையாகாது. குறிப்பாகத் திருநெல்வேலி லாலா கடை இனிப்பு மற்றும் கார திண்பண்ட வகைகள் தமிழகத்தில் பெயர் பெற்றவை. சமையலில் திருநெல்வேலி அவியல் மற்றும் சொதிக்குப் பெயர்பெற்றது.

சொதி, அவியல் மற்றும் இஞ்சி துவையலுடன் கூடிய சாப்பாடு பாரம்பரியமிக்க உணவு மற்றும் திருநெல்வேலியில் இது ஒரு பெருமைமிக்க மதிய உணவாகும்.

பாரம்பரிய உணவு

சொதி தேங்காய்ப் பாலில் செய்தது. அவியல் பல காய்களை நுட்பத்துடன் நறுக்கி, தேங்காய்த் துருவல் நிறையக் கலந்து சமைத்தது. இத்துடன் இணைவது இஞ்சித் துவையல்.

தேவையான அளவு கொழுப்பு உடலுக்கு மிகவும் அவசியம். தேங்காய்ப் பாலில் செய்த சொதியில் நிறையக் கொழுப்புச் சத்து உள்ளது. இந்த வகை கொழுப்பை saturated fat என அழைப்பார்கள். இது இரத்தத்தில் கொலஸ்டிராலை அதிகப்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தவல்லது.

திருநெல்வேலி சொதி

இந்த நிலையில் சோற்றில் இருப்பது முற்றிலும் மாவுப் பொருள். இந்த மாவுப் பொருளும் தேங்காய்ப் பாலில் செய்த சொதியில் நிறைந்துள்ள கொழுப்புச் சத்தும் இணைந்தால் கிடைக்கும் சக்தி இளவயதினருக்குப் பொருத்தமானதுதான். ஆனால் ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த சக்திமிக்க உணவு ஏற்புடையதாக இருக்காது. இதற்குக் காரணம் நம்மிடையே ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேருக்குச் சர்க்கரை நோய் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது . இந்த நிலையில் இவ்வளவு மாவுப் பொருளும் கொழுப்பும் நிறைந்த சொதி விருந்து ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உகந்ததாக இருக்கவாய்ப்பில்லை எனத் தோன்றும்.

ஆனால்சொதியுடன் இஞ்சி துவையல் பரிமாறப்படுகிறது. இஞ்சி இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க வல்லது. மேலும் இஞ்சி சாப்பிட்டால் இரத்த கொழுப்பின் அளவும் கட்டுக்குள் வருகிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது .

இஞ்சியின் இந்த மகிமையை 2015-ம் ஆண்டுதான் அறிவியல் பூர்வமாகச் சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுத்துக் கண்டறியப்பட்டுள்ளது ! அதே நேரத்தில் சொதியுடன் இஞ்சித் துவையல் சேர்த்துச் சாப்பிடுவது திருநெல்வேலியில் கால காலமாக நடந்து வருகிறது. சொதி சாப்பாட்டால் ஏற்றப்படும் இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த இஞ்சிதான் சரியாக இருக்கும் எனத் திருநெல்வேலி மக்களுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கிறது.

உணவு

இந்த நுட்பம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? எப்போது கண்டறியப்பட்டது? இந்த கேள்விகளுக்கு என்னிடம் தற்போது பதிலில்லை. ஆனால் இந்த உணவுப் பழக்கம் பல நூற்றாண்டுக்கு முந்தையது என நான் உறுதியாக நம்புகிறேன்.

நவீன மருத்துவ முன்னேற்றத்தையும் திருநெல்வேலி பாரம்பரிய உணவையும் ஒரு சேர பார்க்கும் போது வியப்பாக உள்ளது !!

இஞ்சி

சொதியுடன் இஞ்சி சேர்த்துச் சாப்பிடுவது பல ஆய்வுகள் செய்து கண்டறியப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பத்திற்கு இணையானது. திருநெல்வேலியில் பல நூற்றாண்டுக்கு முன்னதாகவே அறிவியல் பூர்வமாகச் சிறந்த ஒரு உணவு முறையை வடிவமைத்துள்ளனர். சொதியுடன் இஞ்சித் துவையல் இணைந்திருப்பதைக் கண்டு பூரிப்படைகிறேன் மற்றும் பெருமையடைகிறேன்.

மேலும் வாரம் ஒரு முறை இஞ்சிச் சாறு அருந்தும் வழக்கம் தென் தமிழகத்தில் பரவலாக உள்ளது. நல்ல விருந்து சாப்பாட்டுக்குப் பின் ஒரு இஞ்சி மிட்டாய் சாப்பிட்டால் போதும் நன்றாக ஜீரணமாகும் என்ற நம்பிக்கையும் தென்மாவட்டத்தில் உள்ளது. இது வெறும் நம்பிக்கை மட்டும் இல்லை அறிவியல் பூர்வமான உண்மை !!

இஞ்சி சாப்பிட்டால் இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவு கட்டுப்படுவதை திருநெல்வேலிக்காரர்கள் யாரும் கண்டறியவில்லை. மாறாக இரான் தலைநகரமான டெகரானில் உள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நபிசே கன்டோஷி ( Nafiseh Khondouzi) குழுவினர்தான் கண்டறிந்துள்ளனர். இது விளக்குவது என்னவென்றால் வளைகுடா நாடுகளிலும் இஞ்சி முக்கியமானதாக இருக்கிறது என்பதுதான்.

ஆவணப்படுத்த வேண்டும்

திருநெல்வேலி சித்தா மருத்துவர் மற்றும் பேராசிரியர் சுபாஸ் சந்திரனிடம் இஞ்சியின் இந்த மருத்துவ குணாதிசயங்கள் பற்றிப் கேட்டேன். அவர் இஞ்சி இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதும் சிறந்த அருமருந்து என தொன்மையான சித்தமருத்துவ குறிப்புகள் நிறைய உள்ளன என தெரிவித்தார். ஆனால் இந்த மருத்துவ குறிப்புகள் எதுவும் மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளாகவோ அல்லது காப்புரிமை ஆவணங்களாகவோ இல்லை என்றார்.

இந்த நிலையில் நவின அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றி படிக்கும் போது ஏதோ இரானிய ஆராய்ச்சியாளர் நபிசே கன்டோஷி குழுவினர்தான் முதன் முதலில் இதனை கண்டறிந்தாக அறிய முடிகிறது. ஆனால் நம் அரிய மற்றும் மகத்துவம் வாய்ந்த மருத்துவக் குறிப்புகள் ஓலை சுவடிகள் மற்றும் பழைய புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இவை சில தனி நபர்களின் வீடுகளிலும் மற்றும் சில நூலகங்களில் மட்டும் உள்ளது.

இதனை அறிவியல் சமுகம் முற்றுலும் ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய மருத்துவக் குறிப்புகளை முறைப்படி சோதனை செய்து ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் காப்புரிமைகளாக எழுதி ஆவணப்படுத்த வேண்டும். இல்லை என்றால் இது மருத்துவ குறிப்புகள் மட்டுமேயன்றி கண்டுபிடிப்புகள் இல்லை என உலகநாடுகளால் நிராகரிக்கப்படும். மேலும் படிப்படியாக இந்த மருத்துவக் குறிப்புகள் கசிந்து பிற நாட்டவர்கள் ஆராய்ச்சி கட்டுரையாகவோ அல்லது காப்புரிமையாகவோ பதிவிட்டு அபகரித்துக் கொள்ளும் நிலையும் வரும்.

நோபல் பரிசு

இதுமாதிரி சென்ற வருடம் கெபடிடிஸ் (Hepatitis) பற்றிய ஆராய்ச்சிக்கு 2020 -ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த துறையிலும் நம் பாரம்பரிய மருத்துவமுறை தான் இன்றும் உலகைக் காத்து வருகிறது.

கெபடிடிஸ் (Hepatitis) என்பது கல்லீரலில் வரும் ஒருவகை வைரஸ்களால் ஏற்படும் நோய்யாகும். இவற்றை கெபடிடிஸ் A, B, C, மற்றும் D (Hepatitis A, B, C, and D) என மொத்தம் நான்கு வகைகள் உள்ளன.

கெபடிடிஸ் A வைரசின் மரபணு ஒரு இழை நேர்முக RNA துண்டால் ஆனது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சில வகை உடலுறவுகள் மூலம் வீரியத்துடன் பரவக்கூடியது. இந்த நோயைத் தடுக்க நல்ல தடுப்பூசி உள்ளது.

மரபணு

கெபடிடிஸ் B வைரசின் மரபணு இரண்டிழை வட்டவடிவ DNAவால் ஆனது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இரத்தம், விந்து, போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவக்கூடியது. இந்த நோயைத் தடுக்கவும் நல்ல தடுப்பூசி உள்ளது.

கெபடிடிஸ் C வைரசின் மரபணு ஒரு இழை நேர்முக RNA துண்டாலானது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இரத்தம் மூலம் பரவக்கூடியது தான் மற்றும் பயன்படுத்திய ஊசி, மற்ற மருத்துவ உபகரணங்களால் பரவக்கூடியது. இந்த நோயைத் தடுக்க தடுப்பூசி இல்லை.

கெபடிடிஸ் D வைரசின் மரபணு ஒரு எதிர் முக வட்டவடிவ RNAவால் ஆனது. இதுவும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இரத்தம் மூலம் பரவக்கூடியது தான் மற்றும் பயன்படுத்திய ஊசி, மற்ற மருத்துவ உபகரணங்களால் பரவக்கூடியது தான். இந்த நோயைத் தடுக்கவும் தடுப்பூசி இல்லை.

மஞ்சள் காமாலை

1. ஹர்வி ஆல்டர் (Harvey J. Alter) ஒரு அமெரிக்கர். செப்டம்பர் 12, 1935ல் பிறந்தவர். இரத்தம் பிறரிடமிருந்து பெற்று உடலில் ஏற்றிக் கொள்ளுவதால் ஒரு வகை மஞ்சட்காமாலை பரவுவதை இவர் கண்டறிந்தார். இந்த சோதனைக்காக 1988ல் இவர் மனிதக் குரங்குகளைப் பயன்படுத்தினார். மேலும் இந்த நோய் ஒரு வகை வைரசால் வருகிறது என நிரூபித்தார்.

2. மைக்கேல் ஹவுன்டன் (Michael Houghton) 1949ல் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் மஞ்சள் காமாலை நோயாளிகளின் உடலிலிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் இருக்கும் வைரசைப் பிரித்து கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களில் மூத்தவர். இந்த வைரசை கெபடிடிஸ் C (Hepatitis C) வைரஸ் என அழைப்பார்கள். இவர்கள் மேலும் இந்த வைரசின் மரபணுவின் தகவல்களைக் கண்டறிந்தனர்.

நோபல் பரிசு

3. சார்லஸ் ரயிஸ் (Charles Moen Rice) ஆகஸ்ட் 25, 1952ல் அமெரிக்காவில் பிறந்தார். இவர் மனித கல்லீரலின் ஒரு துண்டை எலியின் கல்லீரலுடன் இணைத்தார். இந்த எலியில் கெபடிடிஸ் C வைரசைச் செலுத்தி சோதனை செய்தார். இந்த சோதனை வைரஸ்க்கு மருந்து கண்டறிய மற்றும் இந்த வைரசின் பண்புகளைக் கண்டறியப் பயன்பட்டது.

இந்த கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு 2020-ம் ஆணாடுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மஞ்சட்காமாலை நோய்க்குச் சிறந்த மருந்து கீழாநெல்லி ஆகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த மருந்தைப் பல நூற்றாண்டுகளாக மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகத் தமிழகத்தில் பயன்படுத்தி வருகின்றோம். கீழாநெல்லியின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலிருக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது இதைத்தவிர இந்த நோயிக்கு சிறந்த மருந்து எதுவுமில்லை.

நோய்க்கு மருந்து..

நம் நீண்ட வரலாறு சிறப்பு மிக்க மருத்துவ அறிவு நோபல் பரிசை விடவும் பெருமை வாய்ந்தது. இதன் வாயிலாக சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் S P தியாகராஜன் கீழாநெல்லியில் ஆய்வு செய்து இதன் நோய் முறிக்கும் பண்புகளைக் உறுதி செய்தார் மற்றும் மாத்திரை வடிவில் ஒரு மருந்தை உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமையும் பெற்றார் !

பேராசிரியர் சுதாகர் , அறிவியலாளர் பொன்ராஜ் , பேராசிரியர்SP தியாகராஜன்

ஆனால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது என்ன நியாயம் எனவும் தெரியவில்லை. மேலே விளக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய்யின் காரணத்தைக் கண்டறிந்தனர். ஆனால் நம் பாரம்பரிய மருத்துவ முறையும் மற்றும் S P தியாகராஜன் அவர்களும் இந்த கொடிய நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்றியுள்ளனர். ஆனால் நோபல் பரிசு வழங்கப்பட்டவில்லை.

நோயை கண்டறிவதைவிட அதை குணப்படுத்தும் கண்டுபிடிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என பாமரனுக்குக் கூட தெரியும். அதனால் நம் கீழா நெல்லியின் மருத்தவ அறிவு நோபல் பரிசை விடவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். சமாதானத்திற்கான நோபல் காந்திக்கு கொடுத்திருக்க வேண்டும். கிடைத்ததா? இல்லையே.. காந்தி நோபல் பரிசையும் விட மேன்மை பொருந்தியவர் என்பதுவும் உண்மை..

பேராசிரியர் SP தியாகராஜன் அவர்கள் தற்போது கோவையில் இயங்கிவரும் அவினாசிலிங்க பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிவருகிறார்.

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், நிறைய மருத்துவ ஆராய்ச்சி மையங்களும், அதிக அளவில் மருந்து பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்ளன. இருந்தும் புதுவிதமான மருந்துகள் கண்டுபிடிப்புகள் நம் நாட்டில் குதிரைக் கொம்புதான். இதற்கு காரணம் பல்கலைக்கழகங்களும், மருத்துவ ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை, மருந்து பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் மருத்துவ ஆராய்ச்சி மையங்களுடனும் பல்கலைக் கழகங்களுடனும் இணைந்து பணியாற்றுவதில்லை. இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து செயல்பட்டாலே புது மருந்துகள் கண்டுபிடிப்புக்கள் நம் தாய் மண்ணில் சாத்தியமாகும்.

உணவு, மருத்துவம்

மேலும் ஒரு நாட்டின் தொழில் நுட்ப வலிமையே அந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என உணர்ந்து பேராசிரியர்களும், பல்கலைக்கழகங்களும், மருந்துவ நிறுவனங்களும், மருந்து பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் பாரம்பரிய மருத்துவ அறிவை முறைப்படி ஆவணப்படுத்த ஒன்றுக்கொன்று இணைந்து வேலை பார்தல் மிகவும் இன்றியமையாதது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முனைப்புடன் செயல்பட்டால் மருத்துவத்துறை மட்டுமின்றி பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.



source https://www.vikatan.com/news/environment/food-medicine-and-other-countries-are-usurping-patents-what-should-be-done-properly

31.07.22 ஞாயிற்றுக்கிழமை - Today RasiPalan | Indraya Rasi Palan | July-31 இன்றைய ராசிபலன் |ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்.

#இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/31072022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

Chess Olympiad Chennai 2022: ரவுண்டு 2 எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!

Randa Sedar (Palestine)
Randa Sedar (Palestine)
Randa Sedar (Palestine)
Randa Sedar (Palestine)
Randa Sedar (Palestine)
Randa Sedar (Palestine)
பிரக்ஞானந்தா
Magnus Carlsen
Magnus Carlsen
Magnus Carlsen
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
பிரக்ஞானந்தா
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Magnus Carlsen
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Chess Olympiad Chennai 2022
Magnus Carlsen


source https://sports.vikatan.com/chess/chess-olympiad-2022-round-2-exclusive-photos